கடந்த 23ம் தேதி ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டில் இருந்து ஸ்விட்சர்லாந்தின் ஸூரிக் நகருக்கு சென்றுக் கொண்டிருந்த விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இறந்த செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
சமீபக்காலமாக விமான விபத்துக்கள் அதிகமாகி வருகிறது. சமீபத்தில்தான் ஒரே நாளில் நான்கு விமான விபத்துகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதேபோல் அடிக்கடி விமான கோளாறுகள் ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்படுவது, காலதாமதமாக விமானம் புறப்படுவது போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.
இதனால் பலமுறை விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடபட்டுத்தான் வருகின்றன. இருந்தாலும் இது தொடர்க்கதையாகி வருகிறது.
அந்தவகையில் டிசம்பர் 23ம் தேதி இயந்திரக் கோளாறு ஏற்பட்டு விமானத்தில் புகை சூழ்ந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அது தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பாக தரையிறங்கிய இந்த விமானத்தில் 74 பயணிகளும் 5 பணியாளர்களும் இருந்தனர்.
பின்னர் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விமானத்தில் இருந்த கேபின் குழு உறுப்பினர்களில் இளம் வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் இளம் பணியாளர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த விஷயத்தை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் தங்களது அன்பான சக ஊழியரின் மரணத்தால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என தலைமை நிர்வாகி Jens Fehlinger தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வண்ணம் அனைத்தையும் சோதிப்பது மிகவும் அவசியம். இதனையும் மீறி இந்த கோளாறுகள் நடப்பதால், தேவையில்லாத உயிர் சேதங்கள் நடக்கின்றன.
இதனால், மக்களுக்கு விமான சேவையின் மேல் உள்ள நம்பிக்கை கெடும் என்றே அஞ்சப்படுகிறது. விமான விபத்துக்கள் ஏற்பட்டால் பேரிழப்புகள் ஏற்படும் என்பதால், பலர் விமானத்தில் பயணிக்கவே அஞ்சுவார்கள். இப்படியான நிலையில், சமீபக்காலமாக நடந்து வரும் இந்த சம்பவங்கள், விமான சேவையின் மேல் உள்ள நம்பிக்கை அனைத்தும் கெட்டுவிடும் என்றே அஞ்சப்படுகிறது.