தைவான் நாட்டில் லட்சக்கணக்கான பச்சோந்திகளை கொல்ல அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான காரணத்தைப் பார்ப்போம்.
சில நாடுகளில் மக்களையும் நிலங்களையும் துன்புறுத்தும் உயிரினங்களை கொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், அந்த குறிப்பிட்ட நாட்டில் அந்த உயிரினமே இல்லாமல் போகிறது. சமீபத்தில் ஜெர்மனியில் ஒரு நகரத்தில் புறாவை கொத்தாக அழித்தார்கள். அதேபோல் மொராக்கோவில் நாட்டில் நாய்களை அழிக்க உத்தரவளிக்கப்பட்டது.
அதேபோல் இப்போது தைவானில் பச்சோந்தியை அழிக்க முடிவெடுத்துள்ளனர். தைவான் அதிகம் விவசாயத்தை நம்பும் ஒரு நாடாகும். விவசாயம் மூலமே நாடு பொருளாதார அளவில் மேம்படுகிறது. அந்தவகையில் தற்போது தைவான் நாட்டின் விவசாயத்தை அச்சுறுத்தும் விதமாக இருக்கும் ஒரு உயிரினமாக பச்சோந்தி இருக்கிறது.
பச்சோந்திகளின் பெரியளவு பச்சோந்தி (green iguanas) (பச்சை உடும்புகள்). இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்த நாட்டின் விவசாயமும் பாதிப்படைந்துள்ளது. இதனால் சுமார் 1.2 லட்ச பச்சோந்திகளை கொல்லும் முடிவை தைவான் எடுத்துள்ளது.
தைவானின் வனவியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, தீவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 2,00,000 பெரியவகை பச்சோந்திகள் இருக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் 70 ஆயிரம் பச்சோந்திகளை கொன்றுள்ளனர். இந்த பச்சோந்திகளை கொல்ல தலா 15 டாலர்கள் அதாவது (1300ரூ) சன்மானமாக வழங்கப்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டு சுமார் 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்ல தைவான் அரசு முடிவெடுத்துள்ளது. இந்தவகையான பச்சோந்திகள் வாழும் கூடுகளை காண்பித்து கொடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த பச்சோந்திகள் பொதுவாக மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளை தாயகமாகக் கொண்டது. ஆனால், சில காலமாக இந்த பச்சோந்திகள் தைவான் நாட்டில் அதிகம் காணப்பட்டு வருகிறது.
இந்த பச்சோந்தியை சாப்பிடும் உயிர்கள் தைவானில் இல்லை என்பதால், இது அதிகளவு பெருகி வருகிறது. சொல்லப்போனால், இந்த வகையான பச்சோந்தியை தைவான் மக்கள் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார்கள். ஆனால், ஒரு வருடத்திற்கு பிறகு இதனை கூண்டுக்குள் வைக்க முடியாது என்பதால், காட்டுக்குள் விட்டுவிடுகின்றனர். இதன் காரணமாக, அந்த பச்சோந்திகள் விவசாய நிலத்தை சேதப்படுத்துகின்றன.