இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா.? முட்டுக்கட்டை போடும் கேவியட் மனு!

7 தொகுதிகளின் தேர்தல் நிலவரம் என்ன? அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா?
கேவியட் மனு
Supreme Court
Updated on

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று தமிழக வெற்றி கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்பட விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என கடந்த ஜூலை 10-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். வழக்கின் சாராம்சத்தை உணர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் ஜூலை 31-ம் தேதி வரை இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க தடை விதித்தது.

இந்நிலையில் எனது தரப்பு வாதங்களை கேட்காமல், எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என மனுதாரர் வெங்கடாஜலபதி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
செம சான்ஸ்..! காலையிலேயே அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.!
கேவியட் மனு

தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், இடைத்தேர்தல் எப்போது வரும் என திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ஆறு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்தனர். இந்நிலையில் மேலும் சில எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க ஜூலை 31 வரை தடை விதித்துள்ள நிலையில், எஞ்சிய இரண்டு தொகுதிகளுக்கு எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் தனியாக 2 தொகுதிகளுக்கு மட்டும் நடத்துவது சாத்தியமில்லை என்பதால், 5 தொகுதிகளின் தேர்தல் வழக்குகள் முடிவடைந்த பிறகு, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த வெங்கடாஜலபதி, இன்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதன்படி எனது தரப்பு வாதங்களை கேட்காமல், எந்த ஒரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Supreme Court
Supreme Court
இதையும் படியுங்கள்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? பெற்றோரின் இந்த விவரம் கட்டாயம்!
கேவியட் மனு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வெங்கடாஜலபதி, தற்போது உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கு தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் முதல்வர் விஜய் மீது கரூர் சம்பவ வழக்கின் விசாரணையும் சூடுபிடித்துள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கிறது.

கேவியட் மனு: நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படும் போது, ஒரு தரப்பினர் கூறுவதை மட்டும் கேட்டு நீதிமன்றம் ஒருதலைப்பட்சமான உத்தரவைப் பிறப்பிப்பதைத் தடுக்க கேவியட் மனு உதவுகிறது. கேவியட் மனுவின் படி நீதிமன்றம் எந்தவொரு உத்தரவை பிறப்பிக்கும் முன்பும், கேவியட் மனுத் தாக்கல் செய்தவருக்கு உரிய முறையில் அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும்.

தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க மனுதாரருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதைத் தடுக்க, கேவியட் மனு சட்டப்பூர்வ கேடயமாக செயல்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com