

தங்கத்தின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில், வார இறுதியில் சற்று உயர்ந்தது. கடந்த வாரத்தில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.400 மற்றும் சவரனுக்கு ரூ.3,200 வரை குறைந்தது. அதேபோல் இந்த வாரத்தில் வெள்ளியின் விலை ரூ.20 வரை குறைந்தது.
நேற்று (ஜூலை 12) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,300-க்கும் விற்பனையானது.
1 கிராம் வெள்ளி ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 13) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,05,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.
2025-ம் ஆண்டு இதே ஜூலை 13-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,120-க்கும், 1 கிராம் ரூ.9,140-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓரே ஆண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளது.
2025 ஜூலை 13-ல் 1 கிராம் வெள்ளி ரூ.125-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓரே ஆண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
இந்த அபரிமிதமான விலை உயர்வால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 50% லாபமும், வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு 100% லாபமும் கிடைத்துள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 12: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400
ஜூலை 11: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400
ஜூலை 10: 1 கிராம் - ரூ.13,350 1 சவரன் ரூ.1,06,800
ஜூலை 09: 1 கிராம் - ரூ.13,320 1 சவரன் ரூ.1,06,560
ஜூலை 08: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 12: 1 கிராம் - ரூ.240
ஜூலை 11: 1 கிராம் - ரூ.240
ஜூலை 10: 1 கிராம் - ரூ.245
ஜூலை 09: 1 கிராம் - ரூ.245
ஜூலை 08: 1 கிராம் - ரூ.245
தங்கத்தின் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், இப்போதும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கியுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் போர் குறித்த நடவடிக்கைகளில் அமெரிக்காவின் முடிவைப் பொறுத்தே தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.