#JUST IN : வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர், CM Vijay
வாஷிங்டன் சுந்தர், CM Vijayimage credit-revsportz.in
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கம் வென்றமைக்காக தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டி டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது.

அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். அதேபோல் இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். கடைசியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. அதனை தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்களால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரன்களை குவிக்க தடுமாறினர். ஒவ்வொரு வீரர்களாக அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இறுதியில் பாகிஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஒவர்கள் வீசி 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருந்தார். இறுதிப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர், தொடர் முழுவதும் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தருக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய், ஆசிய விளையாட்டுத் தங்கப் பதக்க வெற்றியாளர்களுக்கான உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் சாதனையை பாராட்டி ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கிரிக்கெட்டில் மேலும் பல சாதனைகளை படைக்க வாஷிங்டன் சுந்தரை வாழ்த்துகிறேன். வாஷிங்டன் சுந்தரின் வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் ஜி.கமலினி, தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்க்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்திருந்த நிலையில் தற்போது வாஷிங்டன் சுந்தருக்கும் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
மான்செஸ்டரில் மாஸ் காட்டிய வாஷிங்டன் சுந்தர்! முதல் சதத்தில் மிரட்டிய ஆல்ரவுண்டர்!
வாஷிங்டன் சுந்தர், CM Vijay

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com