தமிழ்நாடு காங்கிரஸில்அதிரடி மாற்றம்: மாணிக்கம் தாகூர் ‘IN’... செல்வப்பெருந்தகை ‘OUT’!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை இருந்த நிலையில், அவருக்கு பதிலாக புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
Manickam Tagore|காங்கிரஸ் தலைவர்
Manickam Tagoreimage credit-commons.wikimedia.org
Updated on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை இருந்த நிலையில், அவருக்கு பதிலாக புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் புதிய தலைவர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறப்பித்துள்ளதாக காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றப்படுவார் என்றே கூறப்பட்டது. கூடிய விரைவில் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. செல்வப்பெருந்தகையும் அந்தக் கருத்துகளை மறுக்கவில்லை. தலைமைப் பதவியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலகத் தயாராக இருப்பதாகவே கூறினார். இந்நிலையில், அதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததை தொடர்ந்து திமுகவில் இருந்து விலகியதுடன், தவெக அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின், மாநில அமைப்பை மறு சீரமைக்கும் பணியில் அக்கட்சியின் தலைமை இறங்கியுள்ளது.

தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டியில் தேர்தலுக்கு முன்பாகவே மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் இருந்தனர். தேர்தலுக்கு பின் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்த பிரவீன் சக்கரவர்த்திக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

இதற்கிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை இருந்த நிலையில், அவருக்கு பதிலாக புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

இதற்கு முன் பொறுப்பில் இருந்த செல்வப்பெருந்தகை கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் அவர் இந்த பதிவில் இருந்துள்ளார்.

அதன் பிறகு, 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களைக் காங்கிரஸ் கட்சி, திமுகவுடனான கூட்டணியில் சந்தித்தது.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

இந்நிலையில், தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர், கடந்த 2009, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விருதுநகர் மக்களவை தொகுதி எம்பியான மாணிக்கம் தாகூர் மக்களவை கொறடாவாகவும் இருந்து வருகிறார். மேலும் மாணிக்கம் தாகூர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் அணுக்கமாகச் செல்லக் கூடியவர் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : தேர்தல் முடிந்ததும் ராஜினாமா செய்ய போகிறேன் - செல்வப்பெருந்தகை..!
Manickam Tagore|காங்கிரஸ் தலைவர்

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற் அகில இந்திய காங்கிரஸ், தமிழக நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட நிலையில், காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் உள்பட பெரும்பாலானோர் மாணிக்கம் தாகூரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டிருந்தார். திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திமுகவை கடுமையாக விமர்சித்து தீர்மானம் போட்டவர் மாணிக்கம் தாகூர். குறிப்பாக ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற கருத்தை தொடர்ச்சியாக முன்வைத்தவர்.

திமுக மற்றும் முக ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கக் கூடாது என்பதையும் மறைமுகமாக வலியுறுத்தி வந்தார். அவரது கருத்துகளால் எக்ஸ் தளத்தில் திமுக - காங்கிரஸ் கட்சியினரிடையே பெரிய அளவில் வார்த்தைப் போர் நடந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படியுங்கள்:
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு : கூட்டணி உடைகிறதா?
Manickam Tagore|காங்கிரஸ் தலைவர்

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், காங்கிரஸ் தரப்பிலிருந்து திமுகவுக்கு எதிராக தொடர்ந்து ஒலித்த முக்கிய குரல்களில் ஒருவராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com