வாக்காளர்கள் கவனத்திற்கு..! இந்த சிறு தவறு கூட உங்கள் வாக்கைப் பறிக்கலாம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!

வாக்குப்பதிவு நாளான்று இந்த தவறுகளை செய்தால் ஓட்டுப் போடவே முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு
Updated on

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத் தேர்தல் வரும் நாளை மறுநாள் (ஏப்ரல் 23-ம்தேதி) 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 295 கம்பெனி துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 7.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

இதையடுத்து, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், எழுதுபொருட்கள், தேர்தல் தொடர்பான படிவங்கள், அழியாத மை போன்றவை பலத்த பாதுகாப்புடன் அனுப்பும் பணி நாளை (ஏப்ரல் 22-ந் தேதி) காலை 11 மணி முதல் தொடங்க இருக்கிறது.

வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 23-ந் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளதால் வாக்காளர்களும் வேட்பாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வருகின்றனர். குறிப்பாக இந்த தேர்தலில் புதிதாக களம் இறங்கியுள்ள, இளம் தலைமுறையினர் கொண்டாடும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிடுவதால், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் ஒரு விறுவிறு காணப்படுகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளதால் அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான்று இந்த தவறுகளை செய்தால் ஓட்டுப் போடவே முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன்களை எடுத்து செல்ல அனுமதியில்லை. எனினும் இந்தமுறை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள புதிய வசதியின்படி, வாக்குச்சாவடியில் செல்போன் வைக்க கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொண்டு ஒட்டுபோட்டு முடித்தவுடன் உங்கள் போனை வாங்கிக்கொள்ளலாம்.

வாக்குப்பதிவு செய்ய போகும்போது எந்த ஒரு அரசியல் கட்சியுனும், தொடர்புடைய ஆடைகள், அணிகலன்களை, சால்வை போன்றவற்றை அணியக் கூடாது.

வாக்களிக்கும்போது, புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

வாக்குச்சாவடி அருகில் எந்த கட்சியை பற்றியும் அரசியல் விவாதங்களில் ஈடுபடக் கூடாது.

வாக்குச்சாவடி மையத்திற்கு கூர்மையான பொருட்கள், தடை செய்யப்பட்ட அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.

இதையும் படியுங்கள்:
2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம்! – தேர்தல் ஆணையத்தின் புதிய டிஜிட்டல் வசதி அறிமுகம்..!
வாக்குப்பதிவு

இந்த விதிமுறைகளை பின்பற்றுவது சமூகமான முறையில் வாக்களிக்க ஏதுவாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com