தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்..? எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்!

தமிழகத்தில் அடுத்து யார்? ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதில் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
tamilnadu cm
tamilnadu cmAI Imge
Updated on

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ம்தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி புதிய சாதனையும் நிகழ்ந்திருக்கிறது. கடந்த 2011 தேர்தலின்போது 78.29 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்தாண்டு 85 சதவீத வாக்குகள் பதிவாகி முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. அதாவது கடந்த சட்டசபை தேர்தலில் பதிவானதை விட 12.37 சதவீதம் அதிகமாகும். அதுமட்டுமின்றி இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் திருவிழாவின் க்ளைமாக்ஸான வாக்கு எண்ணிக்கையானது இன்று (மே 4-ம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, 62 மையங்களில் நடைபெறவிருக்கிறது.

தமிழகத்தில் அடுத்து யார்? ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதில் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஆம்.. தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS: NDA-வில் தவெக.? விஜய்க்கு துணை முதல்வர் பதவியுடன் மெகா ஆஃபர்.!
tamilnadu cm

மக்களின் மகத்தான ஆதரவு இருப்பதால் நிச்சயம் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று ஒவ்வொரு கட்சியினரும் சொன்னாலும், அவர்களுக்கு உள்ளுக்குள் ஓர் உதறல் இருக்கத்தான் செய்கிறது. உதடு சிரித்தாலும், யாருக்கும் தெரியாமல் உள்ளம் பதபதைக்கிறது என்பது என்னமோ உண்மை தான்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

'திராவிட மாடல் 2.0' என்ற முழக்கத்துடன் தெம்பாக இருக்கும் திமுக கூட்டணி, 'இந்த முறை நிச்சயம் எங்கள் ஆட்சிதான்' எனக் களமாடும் அதிமுக கூட்டணி ஒருபுறம், 'மாற்று அரசியல்' என்ற கோட்பாட்டுடன் தேர்தல் அரசியலில் தனித்து இயங்கும் நாம் தமிழர் கட்சி, `எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என அன்ப்ரெடிக்டபிளாக இருக்கும் புது வரவு த.வெ.க மறுபுறம் என, நான்குமுனைப் போட்டியால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது.

கிட்டதட்ட 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரு கழகங்கள்தான் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த இரு கழகங்களுக்கும் போட்டியாக இந்த தேர்தலில் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ களத்தில் குதித்தது, மாநில அரசியலில் ஓர் திருப்பு முனையாகவே பார்க்கப்படுகிறது.

தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி சேராமல் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

இடையே டாக்டர் ராமதாஸ், சசிகலா என இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.

முந்தைய தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு வாக்களித் விஜய் ரசிகர்கள் இப்போது தவெகவுக்கு தான் ஓட்டு போட்டு இருப்பார்கள் என்பதால் அந்த கட்சிகளுக்கு சிறிது இழப்பு ஏற்படலாம்.

தேர்தலில் குறைபவான வாக்கு வித்தியாசங்கள் கூட வெற்றி-தோல்வியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.

அதேசமயம் இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்புகள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது சில கருத்து கணிப்புகள் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றும், சில கணிப்புகள், அதிமுக கூட்டணி என்றும் மற்றும் சில கணிப்புகள் தவெக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக கூறுகின்றன. இதன்படி பார்த்தால் தனிப்பட்ட முறையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் சூழ்நிலையில் ஏற்படலாம் என்றும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அரசில் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை.

ஆனால் இந்த தேர்தலில் திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் போனால் கூட்டணி ஆடசி தவிர்க்க முடியாமல் ஆகிவிடும். இதேநிலை தவெகவுக்கும் ஏற்படலாம்.

இவையெல்லாம் வெறும் ஊகங்கள் மட்டுமே...

தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ‘மெஜாரிட்டி’ கிடைக்காமல் போனால் எதுவும் நடக்கலாம். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் சில கட்சிகள் உறுதியாக இருக்கும்.

சரி இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...

மக்கள் ஏற்கனவே யார் அரியணையில் அமரவேண்டும் என தீர்ப்பை எழுதிவிட்டார்கள். வாக்கு எந்திரங்கங்களுக்குள் பத்திரமாக இருக்கும் மக்களின் அந்த தீர்ப்பை இனி யாராலும் மாற்ற முடியாது.

அதேபோல் புதிதாக பதவி ஏற்க இருக்கும் அரசு மக்களுக்கு சுமையை அதிகரிக்காமல் மாநிலத்தின் நிதி நிலைமையை எவ்வாறு மேம்படுத்தப்போகிறது என்பது தான் இப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் 10.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழக அரசு தத்தளிக்கும் நிலையில், புதிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் பல்லாயிரக்கணக்கான கோடி கூடுதல் நிதி தேவைப்படும். தமிழக அரசின் ஆண்டு பட்ஜெட்டே சுமார் ரூ.4.50 லட்சம் கோடி தான். ஆனால் வருவாயோ அதை விட குறைவாக ரூ.3.30 லட்சம் கோடி என்ற அளவில் தான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பிரபல ஜோதிடர் கணிப்பு : விஜய் தான் முதல்வர்.. விஜய்தான் ஆளும் கட்சி..!
tamilnadu cm

எனவே தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும், அவர்கள் கோட்டைக்கு சென்று மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்பதை தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்...

logo
Kalki Online
kalkionline.com