பிரபல ஜோதிடர் கணிப்பு : விஜய் தான் முதல்வர்.. விஜய்தான் ஆளும் கட்சி..!

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜோதிடர்களின் கணிப்புகள் மற்றும் பஞ்சாங்க கணிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
who is next CM
who is next CMAI Image
Updated on

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் நாளை மறுநாள் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.

இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளதால் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.

இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

முதல்முறையாக தேர்தல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை மற்றும் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான கடுமையான போட்டி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜோதிடர்களின் கணிப்புகள் மற்றும் பஞ்சாங்க கணிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் இந்த ஆட்சி தான்..!ராமேஸ்வரம் பஞ்சாங்கம் கணிப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!
who is next CM

சில தினங்களுக்கு முன்பு சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், பல கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை களத்தை சந்திக்க நேரும் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு ராஜயோகம் அமையும் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னும் தேர்தலுக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் மற்றொரு பரபரப்பான செய்தியாக தமிழ்நாட்டில் விஜய் தான் அடுத்த முதல்வராக வருவார் என்று ஜோதிடர் ராதன் பண்டிட் ஒன்இந்தியா தளத்திற்கு அளித்த பேட்டியில் கணித்து கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

கடந்த காலக் கணிப்புகளை நினைவுகூர்ந்த ஜோதிடர் ராதன் பண்டிட், 2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், இபிஎஸ் ஜெயிக்க மாட்டார் என்றும் தான் முன்கூட்டியே கூறியதாகவும், 2016-ல் ஜெயலலிதா குறித்துத் தான் சொன்ன கணிப்புகளும் பலித்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், விஜய்யின் ஜாதகப்படி இந்தத் தேர்தலில் விஜய் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றும், ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

விஜய்க்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் ஆதரவு மிக அதிகமாக உள்ளது என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல, ஜோதிடக் கணிதத்தின்படி தான் கூறுவதாகவும் தெரிவித்தார்.

நான் கணித்தபடி சொல்கிறேன். விஜய்தான் முதல்வர்.. விஜய்தான் ஆளும் கட்சி, என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள கோவில்களைத் திருப்பதி கோவிலுக்கு இணையாக உலகத் தரத்திற்கு உயர்த்துவார் என்றும், மதப்பாகுபாடின்றிப் பல சேவைகளைச் செய்வார் என்றும் ஜோதிடர் ராதன் பண்டிட் தனது பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்த இவரின் இந்த பேட்டி மீண்டும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் திமுக, அதிமுகவிற்கு போட்டியாக விஜய்யின் அதிரடியான வரவு பல அரசியல் கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், தற்போது பஞ்சாங்கம் மற்றும் ஜோதிடர் ராதன் பண்டிட்யின் கணிப்பு மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.

ஜோதிடக் கணிப்புகள் என்பது கிரக நிலைகளின் அடிப்படையில் கூறப்படும் கருத்துக்கள் மட்டுமே. தேர்தல் முடிவுகள் மக்களின் வாக்குகள் மூலமே தீர்மானிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: இந்த தேர்தலுக்கு பல புதிய நடைமுறைகள் அறிமுகம்..!
who is next CM

பொறுத்திருந்து பார்க்கலாம்... இந்தக் கணிப்புகள் நிஜமாகுமா என்பது வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளின் போது தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com