குட் நியூஸ்..! 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை..!

குட் நியூஸ்..! 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை..!
முதியோர் காப்பீட்டுத் திட்டம்
முதியோர் காப்பீட்டுத் திட்டம்Source: senaiarmurasu.com

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

தமிழகத்தில் 70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல்வரின் முதியோர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 38 லட்சம் முதியவர்கள் பயன்பெற உள்ளனர். புற்றுநோய் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர இ-சேவை மையங்கள் மற்றும் காப்பீட்டுப் பதிவு மையங்களை அணுகலாம்.

தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் மானிய கோரிக்​கை​யின் போது மூத்த குடிமக்​களுக்கு கட்​ட​ணமில்லா மருத்​துவ சிகிச்சைகள் பெறும் வகை​யில் முதல்​வரின் முதி​யோர் காப்​பீட்டு திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.புற்​றுநோய் சிகிச்​சைகள், இதய அறுவை சிகிச்​சைகள், உறுப்பு மாற்று சிகிச்​சைகள், உயர்​தர பரிசோதனைகள் உள்​பட காப்​பீட்டு திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும் அனைத்து சிகிச்​சைகளும் அங்​கீகரிக்​கப்​பட்ட அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனைகளில் அளிக்​கப்​படும் என்று சுகாதா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் அறி​வித்​திருந்​தார்.

அதன்​படி, தமிழகத்​தில் 70 வயது நிரம்​பிய 38 லட்​சம் முதி​ய​வர்​களுக்கு வரு​மான உச்ச வரம்​பின்றி அரசு காப்​பீட்​டின் கீழ் கட்​ட​ணமில்லா சிகிச்சை அளிப்​ப​தற்​கான அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் ஏற்கனவே உள்ள, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், அதில் இடம் பெறாத முதியவர்களும், இத்திட்டத்தில் இணைக்கப்படுவர்.

பயனாளிகள் சேர்க்கை, இ – சேவை மையங்கள் வாயிலாகவும், அரசு காப்பீடு பதிவு செய்வதற்கான பிற மையங்கள் வாயிலாகவும் செய்யப்படும்.புதிதாக இணையும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவருக்கு, 849 ரூபாய் என்ற வீதத்தில் காப்பீட்டு தவணை தொகை, யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்திற்கு வழங்கப்படும்.‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் ஏற்கனவே உள்ள, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், அதில் இடம் பெறாத முதியவர்களும், இத்திட்டத்தில் இணைக்கப்படுவர்.

பயனாளி​கள் சேர்க்கை, இ-சேவை மையங்​கள் மூலமாகவும், அரசு காப்​பீடு பதிவு செய்​வதற்​கான பிற மையங்​கள் மூலமாகவும் மேற்​கொள்​ளப்​படும். புதிதாக இணை​யும் 70 வயதுக்கு மேற்​பட்ட மூத்த குடிமக்​களுக்கு ரூ.849 என்ற வீதத்​தில் காப்​பீட்டு தவணை தொகை யுனைடெட் இந்​தியா காப்​பீட்டு நிறு​வனத்​துக்கு வழங்​கப்​படும்.

அடுத்த ஆண்டு புதிய காப்​பீட்டு நிறு​வனத்​துக்​கான ஒப்​பந்​தப்​புள்ளி கோரப்​படும் போது பிரீமியம் தொகை​யில் மாற்​றங்​கள் ஏற்​பட வாய்ப்​புள்​ளது. தற்​போது முதல்​வர் காப்​பீட்​டில் உள்ள அனைத்து மருத்​துவ சேவை​களும் முதி​யோர் காப்​பீட்டு திட்​டத்​திலும் செயல்​படுத்​தப்​படும்.

தமிழ்​நாடு சுகாதார சேவை​கள் திட்ட இயக்​குநரின் கோரிக்​கையை ஏற்று, நிதித்​துறை​யின் ஒப்​புதலுடன் இத்​திட்​டத்தை செயல்​படுத்த அரசு அனுமதி அளித்​துள்​ளது. பயனாளி​களை சேர்ப்​ப​தற்கு முன்பு அவர்​களது சுய விவரங்​கள் முறை​யாக சரிபார்க்​கப்​பட வேண்​டும் என நிபந்​தனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், முதல்​வர் காப்​பீடு, ஆயுஷ்​மான் பாரத் உள்​ளிட்ட திட்​டங்​களில் உள்ள பயனாளிக்கு இரட்டை பலன் கிடைக்​காதவாறு இதனை செயல்​படுத்​து​வது முக்​கியம். இந்த விஷயங்​களை திட்ட இயக்​குநர் உறுதி செய்ய வேண்​டும்.

இவ்​வாறு அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இதையும் படியுங்கள்:
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்! ரூ.4 கோடியில் 400 சிறப்பு ஸ்கூட்டர்கள்..!
முதியோர் காப்பீட்டுத் திட்டம்