தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டர் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி..?

differently abled welfare schemes
differently abled welfare schemesAI Image
Updated on

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இலவசமாக வழங்கி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கை, கால், தண்டுவடம், போலியோ பாதிப்புக்கு உள்ளான 75 சதவீதத்திற்கு மேல் குறைபாடுடைய நபர்களுக்கு இணைப்பு பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.

இதைப்பெற தகுதியானவர்கள் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் பெற 75 சதவீத குறைபாடு என்றிருந்த தகுதியை, தமிழக அரசு கடந்த ஆண்டு 60 சதவீதமாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக, அரசால் வழங்கப்படும் இந்த வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

இலவச ஸ்கூட்டர் - புதிய விதிமுறைகள்

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் உண்மையான பயனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக பின்வரும் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! இனி சைக்கிள் விலையில் இ-பைக் கிடைக்கும்.!
differently abled welfare schemes

தமிழக அரசிடமிருந்து இலவசமாகப் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை எந்தவொரு காரணத்தைக் கொண்டும் பிறருக்கு விற்பனை செய்யவோ அல்லது அடகு வைக்கவோ கூடாது.

மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பிற்காகவும், நலனுக்காகவும் வழங்கப்படும் இந்த ஸ்கூட்டரில் உள்ள இணைப்புச் சக்கரங்களை கழற்றிவிட்டு, சாதாரண ஸ்கூட்டராக மாற்றியோ அல்லது மற்றவர்கள் ஓட்டும் வகையிலோ பயன்படுத்தக் கூடாது. ஆய்வில் இவ்வாறு செய்வது தெரியவந்தால், அந்த வாகனம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும் போது, ‘அரசிடமிருந்து பெறப்படும் இந்த ஸ்கூட்டரை விற்க மாட்டேன், இணைப்புச் சக்கரங்களை கழற்ற மாட்டேன்’ என்று பயனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கட்டாயமாக உறுதிமொழிக் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தகுதிகள்:

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டை

இரு கால்களிலும் கடுமையான கை, கால், தண்டுவட பாதிப்பு அல்லது தசைச்சிதைவு (Muscular Dystrophy) உள்ளவர்கள். இரு கால்களும் பாதிக்கப்பட்டதற்கான மருத்துவ சான்றிதழின்படி குறைந்தது (40%) ஊனமுற்றவராக இருக்க வேண்டும். அல்லது அதற்கு மேல் பாதிப்பு இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான முறையான ஓட்டுநர் உரிமம் அல்லது அதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

கல்லூரி மாணவராகவோ, அரசு/தனியார் நிறுவன பணியாளராகவோ அல்லது சுயதொழில் செய்பவராகவோ இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (National ID Card)

மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சான்றிதழ் ((60%) அல்லது அதற்கு மேல்)

இருப்பிடச் சான்று

வருமானச் சான்று

ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

வேலைவாய்ப்பு அல்லது கல்விக்கான சான்றிதழ்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உங்கள் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை (District Differently Abled Welfare Officer - DDAWO) நேரில் அணுகி விண்ணப்பப் படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம். சென்னை பகுதியில் வசிப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் அல்லது மாநில வள பயிற்சி மையத்தை அணுகலாம். அல்லது தமிழக அரசின் இணையதளம் மூலம் இதற்கான அறிவிப்புகள் வரும்போது விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பெண்களுக்கு சிலிண்டர் - திரிபுரா தேர்தலில் பாஜக வாக்குறுதி!
differently abled welfare schemes

இத்திட்டம் முற்றிலும் இலவசமானது மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டர்களை விரைவாக வாங்கித் தருவதாகக் கூறி இடைத்தரகர்கள் யாராவது பணம் கேட்டால், பொதுமக்கள் அவர்களை நம்பிப் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com