

சமூக சிந்தனைகளுடன் கூடிய, மனித நல்லுணர்வை பிரதிபலிக்கும் தமிழ் திரை படைப்புக்களை கொண்டாடும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், அதேபோல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த படைப்புகளை பாராட்டும் வகையில் சிறந்த கலைஞர்களுக்கும், சிறந்த நெடுந்தொடர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், சமீப காலங்களில் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் 2014-2022 ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கான சிறந்த திரைப்பட விருதுகளை தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகளை அடுத்த மாதம் 13-ம்தேதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார்.
சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது.
சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1 லட்சமும், 3 மற்றும் சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் வழங்கப்படும். பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 லட்சம் வழங்கப்படுகிறது.
சிறந்த திரைப்படங்கள் :
2016 - மாநகரம்
2017 - அறம்
2018 - பரியேறும் பெருமாள்
2019 - அசுரன்
2020 - கூழாங்கல்
2021 - ஜெய்பீம்
2022 - கார்கி
ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர்கள் :
2016 – விஜய் சேதுபதி – புரியாத புதிர்
2017 - கார்த்தி – தீரன் அதிகாரம் ஒன்று
2018 - தனுஷ் – வட சென்னை
2019 - பார்த்திபன் - ஒத்த செருப்பு சைஸ் 7
2020 - சூர்யா – சூரரைப் போற்று
2021 - ஆர்யா – சார்பட்டா பரம்பரை
2022 - விக்ரம் பிரபு -டாணாக்காரன்
- ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைகள் :
2016 - கீர்த்தி சுரேஷ் – பாம்பு சட்டை
2017 - நயன்தாரா – அறம்
2018 - ஜோதிகா – செக்கச் சிவந்த வானம்
2019 - மஞ்சு வாரியர் – அசுரன்
2020 - அபர்ணா பாலமுரளி - சூரரைப் போற்று
2021 - லிஜோ மோல் ஜோஸ் – ஜெய்பீம்
2022 - சாய் பல்லவி – கார்கி
- ஆகியோருக்கு சிறந்த நடிகைகளுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப்படங்கள்(சிறப்பு பரிசு) :
2016 - அருவி
2017 - தர்மதுறை
2018 - கனா
2019 - பொன் மகள் வந்தாள்
2020 - கமலி From நடுக்காவேரி
2021 - நெற்றிக்கண்
2022 - அவள் அப்படித்தான் - 2
ரோபோ சங்கருக்கு 'இரவின் நிழல்' படத்திற்காகவும், இந்திரஜா சங்கருக்கு 'விருமன்' படத்திற்காகவும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுகள் ரோபோ சங்கருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.
சிறந்த இயக்குநர்கள்:
சிறந்த இயக்குநர்கள் விருது 2016-லோகேஷ் கனகராஜ், 2017-புஷ்கர் காயத்ரி, 2018- மாரி செல்வராஜ், 2019- பார்த்திபன், 2020- சுதா கொங்கரா, 2021- தா.செ.ஞானவேல், 2022-கவுதம் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த இயக்குனர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நகைச்சுவை நடிகர்கள் :
ரோபோ சங்கர்(வேலைன்னு வந்ததுட்டா வெள்ளக்காரன்), பால சரவணன் (என் ஆளோட செருப்ப காணோம்), யோகிபாபு (மோகினி), கருணாகரன்(மான்ஸ்டர்), ரக்ஷன்(கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்), யோகி பாபு(டாக்டர்), ரோபோ சங்கர்(இரவின் நிழல்)
சிறந்த நகைச்சுவை நடிகைகள் :
மதுமிதா (காஸ்மோரா), ஊர்வசி (மகளிர் மட்டும்),தேவதர்ஷினி(96), கோவை சரளா(காஞ்சனா -3), மதுமிதா (வரசி) இந்திரஜா சங்கர்(விருமன்)
சிறந்த வில்லன் நடிகர்கள் :
ரகுமான் (ஒரு முகத்திரை), பிரசன்னா (திருட்டு பயலே-2), சமுத்திரகனி (வட சென்னை), அர்ஜூன் தாஸ் (கைதி), நந்தா (வானம் கொட்டட்டும்), தமிழ் (ஜெய் பீம்), பிரகாஷ் ராஜ்(விருமன்).
பின்னணி பாடகர்கள், பாடகிகள் :
வேல்முருகன், சத்யபிரகாஷ், சித் ஸ்ரீராம், ஹரிச்சரண்(பல பாடல்கள்), அம்ரிஷ், அறிவு, ஹரிச்சரண்(இரவின் நிழல்),
வைக்கம் விஜயலட்சுமி, ஷக்தி ஸ்ரீ, ஆராதான சிவகார்த்திகேயன், சைந்தவி, வர்ஷா ரஞ்சித், பவதாரணி, கதீஜா ரஹ்மான்,
சிறந்த இசைமைப்பாளர்கள் :
ஷாம் C.S.(புரியாத புதிர்), ஹிப் ஹாப் தமிழா(கவண்), சந்தோஷ் நாராயணன்(வட சென்னை), தமன் (மகாமுனி), ஜி.வி.பிரகாஷ் (சூரரைப்போற்று), ஷான் ரோல்டன்(ஜெய் பீம்), ஏ.ஆர்.ரகுமான்(பொன்னியின் செல்வன்-1)
சின்னத்திரை விருது :
சின்னத்திரையில் சிறந்த நடிகர்களாக, நடிகர்கள் எம் ராஜ்குமார், ஆர் பாண்டியராஜன், கவுசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வா சஞ்சீவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ், சஞ்சீவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த சின்னத்திரை நடிகைகளாக, ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நெடுந்தொடர்களாக, அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.