தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கான அறிவிப்பு வெளியீடு!

மகாபலிபுரம் கடற்கரை கோயில்
மகாபலிபுரம் கடற்கரை கோயில்https://www.tamilnadutourism.tn.gov.in
Published on

நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களைப் பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டுகள், நடனம், இசை, திருவிழாக்கள், உணவு வகைகள், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுடன், சுற்றுலாவின் தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்றாவது ஆண்டாக வழங்கப்படும் இவ்விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 27.09.2024 அன்று வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகள் சுற்றுலா தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா பங்குதாரர்களிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க வழிவகுக்கும்.

விருதுகளின் வகைப்பாடுகள்:

1. தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Inbound Tour Operator),

2. சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Domestic Tour Operator),

3. சிறந்த பயண பங்குதாரர் (Best Travel Partner),

4. சிறந்த விமான பங்குதாரர் (Best Airline Partner),

5. சிறந்த தங்குமிடம் (Best Accommodation),

6. சிறந்த உணவகம் (Best Restaurant),

7. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம் (Tamil Nadu Tourism Development Corporation Star Performer),

8. சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம் (Tourism Promotion Award (Best District)),

9. சுத்தமான சுற்றுலாத்தலம் (Cleanest Tourism Destination),

10. பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் (Best Niche Tourism Operator),

11. சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Adventure Tourism and Camping site Operator),

12. சிறந்த MICE சுற்றுலா அமைப்பாளர் (Best Meetings Incentives Conference and Exhibition (MICE) Organizer),

13. சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர் (Best Social Media Influencer)

14. சிறந்த சுற்றுலா வழிகாட்டி (Best Tourist Guide),

15. தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம் (Best Advertisement on Tamil Nadu),

இதையும் படியுங்கள்:
தியானத்தில் கடவுளிடம் பேச முடியுமா? அறிவியல் ஆய்வு கூறும் உண்மை!
மகாபலிபுரம் கடற்கரை கோயில்

16. சுற்றுலாவினை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல் (Best Tourism Promotion Publicity Material)

17. சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் (Best Educational Institution for Tourism and Hospitality).

விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு சுற்றுலாத் துறையால், உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2024) விருதுகள் வழங்கப்படும். விருதுகளுக்கான விண்ணப்பத்தினை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 20.08.2024க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com