சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? ரூ.5 கோடி கடன் தரும் வெற்றி மகளிர் திட்டம்..!

தமிழக அரசு பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட’த்தை அறிவித்துள்ளது.
வெற்றி மகளிர் திட்டம்
வெற்றி மகளிர் திட்டம்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழக அரசின் வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் பெறத் தகுதியான பெண் தொழில்முனைவோர் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட’த்தை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவோடு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது உங்களுக்கான நேரமாகும். முதலமைச்சர் விஜய் தலைமையில் பெண்களை தொழில்முனைவோராக மாற்றவும், அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கவும் முக்கிய முன்னேடுப்பை எடுத்துள்ளது.

வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு ரூ.10 முதல் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாடடின் 234 தொகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் தொழில் தொடங்க ஆர்வமுள்ள 10 திறமையான பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களின் விண்ணப்பங்கள் அனுப்புமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் பரீசிலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முழு ஆதரவு வழங்கப்படும். பெண்கள் அதிகாரம் பெற்று பொருளாதாரத்தில் முன்னேறும்போதுதான் தமிழ்நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.

இந்த திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலம் வாங்குவதற்கும், திட்டம் சார்ந்த கட்டிடங்களை கட்டுவதற்கும், இறக்குமதி செய்யப்பட்ட அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய எந்திரங்கள் மற்றும் சாதனங்களை வாங்குவதற்கும் இந்த நிதியுதவி வழங்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்) :

புதியதாகத் தொழில் தொடங்க விரும்பும் அல்லது ஏற்கனவே தொழில் நடத்தி வரும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண்கள் தொடங்கி, குறைந்தபட்சம் 51 சதவீத பங்குகளை (controlling stake) பெண்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

தனியுரிமை நிறுவனங்கள், ஒன் பர்சன் நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், எல்எல்பி நிறுவனங்கள் மற்றும் தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் தகுதி பெறுகின்றன.

தேர்வு முறை:

தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் உள்ள தகுதியான பெண் தொழில்முனைவோரிடமிருந்து ஆரம்ப கட்டமாகத் தொகுதிக்கு 10 பேர் வீதம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கூட்டாண்மை நிறுவனங்கள் :

வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள்

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்.

தொழில் பயிற்சி :

முதல்முறையாக தொழில் தொடங்கும் பெண்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) மூலம் சிறப்பு தொழிற்பயிற்சியும் வழங்கப்படும்.

Vettri Women Entrepreneurs Scheme|வெற்றி மகளிர்
Vettri Women Entrepreneurs Scheme|வெற்றி மகளிர்AI image

எவ்வளவு கடன் வழங்கப்படும் :

குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை

பயனாளர்களின் பங்களிப்பு தொகை :

புதிய நிறுவனங்கள் திட்டச் செலவில் 20 சதவீதத்தையும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள் 15 சதவீதத்தையும் தங்களது பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

கடன்-பங்கு விகிதம் 4:1 என்ற அடிப்படையில் கணக்கிடப்படும்.

கடன் வட்டி விகிதம் :

தற்போதைய முதன்மை கடன் வட்டி விகிதத்தின்படி ஆண்டுக்கு 9.95 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது (குறையும் இருப்பு அடிப்படையில்).

கடனை திருப்பி செலுத்தும் முறை-காலம் :

மாதத் தவணையில் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை திரும்பச் செலுத்தலாம்.

அதில் 2 ஆண்டுகள் வரையிலான தவணை ஒத்திவைப்பு காலமும் அடங்கும்.

சிபில் மதிப்பெண் (CIBIL Score):

எம்.எஸ்.எம்.இ (MSME) நிறுவனங்களின் சிபில் தரவரிசை 7 அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

தனிநபர் சிபில் மதிப்பெண் 600-க்கு மேல் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இனி தொழில் தொடங்க 21 நாட்கள் போதும்.! அமைச்சர் கீர்த்தனா அதிரடி.!
வெற்றி மகளிர் திட்டம்

பிணைய சொத்து :

புதிதாக தொடங்கப்படும் அல்லது 3 ஆண்டுகளுக்கு குறைவாக செயல்படும் நிறுவனங்கள், கடன் தொகையில் 40 சதவீத மதிப்பிலான அசையாச் சொத்தை பிணையமாக வழங்க வேண்டும்.

3 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல செயல்பாட்டுடன் இயங்கி வரும் நிறுவனங்களுக்கு 20 சதவீத அசையாச் சொத்து பிணையம் போதுமானது.

இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் கடன்களுக்கு ஆய்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால், கடன் தொகையில் 0.25 சதவீதம் முன்கூட்டிய கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

தகுதியான பெண்கள் TIIC அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? பெண்களுக்கு ₹1 கோடி வரை கடன் தரும் மத்திய அரசு திட்டங்கள்!
வெற்றி மகளிர் திட்டம்

பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு இந்தத் திட்டம் நிதியுதவி வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க தேவையான நிதியுதவி கிடைப்பதால், பெண்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் சொந்தமாக வருமானம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com