

இனிமேல் எந்த ஒரு அரசு துறை சார்ந்த தேவைகளுக்கும் நெட் சென்டருக்கு கால் கடுக்க நடந்து போக வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்து கொண்டே உங்களுடைய வாட்ஸ்அப் மூலம் உங்களுக்கு தேவையான அரசு சான்றிதழ்களையும், டாக்குமெண்டுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. வாங்க அதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி என்று கிட்டதட்ட 50 வகையான அரசு சேவைகளை வீட்டில் இருந்து கொண்டே வாட்ஸ்அப் மூலமாக செய்து கொள்ளலாம்.அதாவது உங்களுக்குஏதாவது சான்றிதழ் வேண்டுமென்றாலும் அதை கூட நீங்க வாட்ஸ்அப் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மக்களின் தேவைகளை சுலபமாக்கும் வகையில் தமிழக அரசு,"நம்ம அரசு" (Namma Arasu) என்ற வாட்ஸ்அப் சாட்பாட் சேவை மூலம் பிறப்பு, இறப்பு,வருவாய் சான்றிதழ்கள், மற்றும் பிற அரசு சேவைகளை வாட்ஸ்அப் வழியாகவே எளிதாகப் பெற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்களுடைய மொபைல் போனில் இந்த நம்பரை வாட்ஸ்அப்பில் +91 78452 52525 சேவ் செய்து கொள்ளவும்.
பின்னர் அந்த நம்பருக்கு ‘HI’ என்று டைப் செய்தால் ‘வெல்கம் டூ நம்ம அரசு தமிழ்நாடு அரசு வாட்ஸ்அப் சர்வீஸ்’(welcome to namma arasu-tamilnadu government WhatsApp services) என்று காட்டும். அதில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளை காட்டும்.
நீங்கள் அரசு திட்டங்களை தமிழில் தொடர வேண்டும் என்று விரும்பினால்(to continue in tamil Type T) ‘T’ என்று டைப் செய்தால் ‘வணக்கம் நம்ம அரசு தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் சேவைக்கு தங்களை வரவேற்கிறோம்’ என்று வரும்.
ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் ‘E’ என்று டைப் செய்ய வேண்டும்.
அதில் உள்ளே சென்றால் அரசு துறைகள் என்னவெல்லாம் இருக்கிறது என்று லிஸ்டில் காட்டும்.
அதில் ‘துறையை தேர்ந்தெடுக்கவும்’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் வரும் சென்னை மெட்ரோ இரயில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர், பெருநகர சென்னை மாநகராட்சி, பதிவுத்துறை, இந்த சமய அறநிலையத்துறை, கல்வி உதவித்தொகை தகுதி அறிதல், தமிழ்நாடு மின பகிர்மானக்கழகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை இப்படி 50 தமிழ்நாடு அரசுத்துறையின் சேவைகள் இருக்கும்.
இதில் உங்களுக்கு தேவையான துறையை தேர்வு செய்து அதில் உங்களுக்கு தேவையான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டும் என்றால் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறையை தேர்வு செய்து இதிலிருந்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.
அதில் எப்படி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது என்று பார்க்கலாம்.
* முதலில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறையை தேர்வு செய்து உள்ளே செல்ல வேண்டும்.
* அப்படி உள்ளே சென்றால் அதில் ‘எந்த சேவையை தேர்ந்தெடுக்கவும்’ என்ற ஆப்ஷன் கீழே ‘பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம்’, ‘இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம்’ என்று இரு ஆப்ஷன்கள் இருக்கும்.
* அதில் நீங்கள் ‘பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம்’ என்பதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
* அப்படி உள்ளே சென்றால் மற்றொரு ஆப்ஷன் வரும்.
*அதில் ‘விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்’ என்ற ஆப்ஷனுக்கு கீழே பதிவு எண் மற்றும் RCH ID என்று இரு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
* அதில் மருத்துவமனையில் குழந்தை பிறக்கும் போது ஒரு நம்பர் கொடுப்பார்கள் இந்த நம்பரை இதில் பதிவு செய்தால் உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் வந்துவிடும். பிறகு அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே இனிமேல் எல்லா சேவைகளை பெறவும் அலைய வேண்டிய தேவையில்லை. மிகவும் எளியமுறையில் உங்களது வாட்ஸ்அப் மூலமாகவே செய்து கொள்ள முடியும்.