

மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள புதிய நுகர்வோர் விலை குறியீடு (CPI) தரவுகளின்படி, செப்டம்பர் 2026 ஆம் ஆண்டில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சில்லறை பணவீக்கம் (விலைவாசி உயர்வு) மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் (Retail Inflation)5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆகஸ்ட் மாதத்தின் 4.83% உடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
உணவுப் பொருட்களின் அதீத விலை உயர்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் (CFPI) அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் 5.97%-லிருந்து 7.74% ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் நாட்டிலேயே அதிக பணவீக்கம் கொண்ட மாநிலங்களில் புதுச்சேரிக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கமும் ரிசர்வ் வங்கியின் 6% உச்ச வரம்பை நெருங்கியுள்ளது.
மத்திய புள்ளியியல் அமைச்சகம் சமீபத்தில் இந்தியாவில் பதிவான புள்ளி விவரங்கள் குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டு இருந்தது. அதன்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4.83 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 8 மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதே காலகட்டத்தில் உணவு பணவீக்கம் 5.97 சதவீதத்தில் இருந்து 7.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை புதுச்சேரியில் தான் அதிகபட்சமாக 6.86 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 6.81 சதவீதம் பணவீக்கம் பதிவாகியுள்ளது.
தேசிய சராசரியை விட தமிழகத்தின் பணவீக்கம் 1.27 சதவீத புள்ளிகள் அதிகம். உணவு பணவீக்கம் உயர்வு விலைவாசி அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய மாநிலங்களில், இந்திய அளவிலான இந்த சில்லறை பணவீக்கப் பட்டியலில் மாநில வாரியாகப் பார்க்கும்போது தமிழ்நாடு 6.81% பணவீக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய சராசரியான 5.54%-ஐ விட மிக அதிகமாகும்.
கடந்த ஜனவரி மாதத்தில் 3.35 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பணவீக்கம், தற்போது 6.81 சதவீதமாக இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஒடிசா (6.70%), மத்தியப் பிரதேசம் (6.68%), தெலுங்கானா (6.64%) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (6.29%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
விலைவாசி உயர்வில், 2026ஆம் ஆண்டின் இதுவரையிலான ஒவ்வொரு மாதத்திலும் முதலிடத்தில் இருந்த தெலுங்கானாவை பின்னுக்கு தள்ளி 6.81 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
உணவுப் பொருட்களின் அதீத விலை உயர்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் கண்காணிப்பில் உள்ள 42 அத்தியாவசிய பொருட்களில் 41 பொருட்களின் விலைகள் ஓராண்டில் உயர்ந்துள்ளது. வெங்காயம் 113 சதவீதமும், சர்க்கரை 22 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் 18 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது.
தேசிய அளவில், முக்கிய உணவு பொருட்களில் வெங்காயத்தின் விலையில்தான் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 48.78 சதவீதமாக இருந்த வெங்காயத்தின் பணவீக்கம், தற்போது 108.09 சதவீதமாக எகிறி, விலை இரட்டிப்பாகியுள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு செப்டம்பரில் வெங்காயத்தின் பணவீக்கம் 108.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பூண்டு விலை உயர்வு ஆகஸ்ட் மாதம் 43.60 சதவீதமாக இருந்த பணவீக்கம் செப்டம்பரில் 54.62 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் எலுமிச்சையின் பணவீக்கம் 36.41 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் எலுமிச்சையின் பணவீக்கம் 15.15 சதவீதமாக இருந்தது.
இந்தாண்டு நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் பணவீக்கம் (Rural Inflation)அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 5.24 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 6.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறங்களில் இது 4.31 சதவீதத்தில் இருந்து 4.88 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற உணவு பணவீக்கம் 8.06 சதவீதமாகவும், நகர்ப்புற உணவுப் பணவீக்கம் (Urban Inflation) 7.18 சதவீதமாகவும் உள்ளது.
அதேசமயம் அனைத்து பொருட்களின் விலையும் ஒரே மாதிரியாக உயரவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது உருளைக்கிழங்கு விலை 11.50 சதவீதமாகவும், தக்காளியின் விலை 8.62 சதவீதமாகவும் சரிந்துள்ளது.
தனிநபர் பராமரிப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் இதர பொருட்கள், சேவைகள் பிரிவில் விலை உயர்வு 13.75 சதவீதமாக உள்ளது. சுகாதாரப் பிரிவில் பணவீக்கம் 1.40 சதவீதமாகவும், வீடு, தண்ணீர், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பிரிவுகளில் 2.74 சதவீதமாகவும் உள்ளது. 2024 அடிப்படை ஆண்டை கொண்ட கணக்கிடப்பட்ட பணவீக்கத்தில் இந்த செப்டம்பர் மாத பணவீக்கமே அதிகபட்சமாகும். புதிய கட்டமைப்புக்கு மாறிய பிறகு பதிவான பணவீக்க விகிதங்களில், செப்டம்பர் மாதத்தில் தான் மிக அதிகபட்ச பணவீக்கம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தான் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 5.50%ஆக நிர்ணயம் செய்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இனிவரும் காலங்களிலும் வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.