#BREAKING : தமிழகத்தில் நாளை மறுநாள் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்..!

செப். 30 தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்! பயணிகள் கடும் அவதி
BUS STRIKE
BUS STRIKE Source:oneindia
Updated on: 

தமிழகத்தில் தனியார் பேருந்துகள் நாளை மறுநாள் (செப்., 30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தனியார் பேருந்துகள் ஓடாது என்பதால் வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

தமிழகத்தில் உள்ள 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயங்கும் 69% பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 'வெற்றிப் பயணம்' எனப் பெயரிடப்பட்டு, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதலமைச்சரால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தம் 18,413 பேருந்துகளில், 12,692 பேருந்துகள் (69%) இத்திட்டத்தின் கீழ் இயங்கவுள்ளன. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் பெண் பயணிகள் கட்டணமின்றிப் பயனடைவார்கள். மாணவிகள் கல்லூரிகளுக்குச் செல்லவும், பெண்கள் பணியிடங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குச் செல்லவும் இத்திட்டம் பெருமளவில் உதவும்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர, நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, தனியார் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு ஈடாகத் தனியார் பேருந்துகளுக்கு அரசு மானியம் வழங்கி உதவ வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தும் வகையில், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகப் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அடிதூள்.. "வரிவிலக்கு முதல் தனி ஓடிடி வரை" அமைச்சரின் மெகா அறிவிப்புகள்.!
BUS STRIKE
logo
Kalki Online
kalkionline.com