அடிதூள்.. "வரிவிலக்கு முதல் தனி ஓடிடி வரை" அமைச்சரின் மெகா அறிவிப்புகள்.!

வரிவிலக்கு, அரசு சினிமா விருதுகள் மற்றும் எளிதான படப்பிடிப்பு அனுமதி குறித்து அரசு முக்கிய அறிவிப்பு.
தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி
Minister Rajmohan
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் (Tamil Film Active Producers Association) 6-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று (செப்டம்பர் 26) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பு செலவு, ஓடிடி வெளியீட்டு கால அவகாசம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் தமிழ் சினிமாவிற்கு என்று தனி ஓடிடி தளத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
88% சந்தை யார் கையில்? தனியார் பால் விலை எகிற காரணம் இதுதான்.! புட்டு புட்டு வைத்த அன்புமணி!
தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “தமிழ் சினிமா மீது தமிழக அரசுக்கு சிறப்பு கவனம் உள்ளது. உங்கள் துறையில் இருந்து வந்தவர் தான் இன்று மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். இனி ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சார்பில் சினிமா விருதுகள் வழங்கப்படும்.

சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, வரிவிலக்கு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

நானும் சினிமா குடும்பத்தில் ஒருவன் தான். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிக்கும் போது நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன். இப்போது நான் அமைச்சர் ஆகி விட்டேனா என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. இதற்கெல்லாம் காரணமாக இருந்த முதல்வருக்கு நன்றி.

சினிமா படப்பிடிப்புத் தளத்திற்கு அரசிடம் அனுமதி வாங்குவது முன்பெல்லாம் பெரிய வேலையாக இருந்தது. ஆனால் இப்போது அனைத்துமே கணினி மயமாகி விட்டதால், யாரும் தலைமைச் செயலகம் வர வேண்டிய அவசியமே இல்லை. சிறிய படம், பெரிய படம் என்றில்லாமல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் படப்பிடிப்புக்கான அனுமதி தானாகவே கிடைத்து விடும்.

தமிழ் சினிமா படங்களுக்காக மட்டும் தனி ஓடிடி தளத்தை உருவாக்குவதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வரும். இதுகுறித்து முடிவெடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை அவசியம். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக பேசலாம். யாரும் முன்கூட்டியே முடிவெடுத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம். அனைவரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவை எடுப்போம்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, அனைத்து துறைகளிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது” என அமைச்சர் பேசினார்.

Minister Rajmohan
Minister Rajmohanimage credit-@Raj Mohan
இதையும் படியுங்கள்:
நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்: நூலிழையில் உயிர் தப்பிய 29 பேர்.! திக் திக் வீடியோ..!
தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி

தமிழ் சினிமாவிற்கு தனி ஓடிடி தளம், விரைவான படப்பிடிப்பு அனுமதி, வரிவிலக்கு மற்றும் ஆண்டுதோறும் சினிமா விருதுகள் என அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருப்பதால், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் ஒரு படம் திரைக்கு வந்த பிறகு ஓடிடி தளத்தில் வெளியாக 8 வார கால அவகாசம் வேண்டும் என்ற விதியை, ஓடிடி தளங்கள் முறையாக பின்பற்ற வேண்டுள் என அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ஒரு படம் வெளியாகி 8 வாரத்திற்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் எல்லா படங்களும் அப்படி வெளியாவதில்லை.

ஒருசில படங்கள் 8 வார காலத்திற்கு உள்ளாகவே ஓடிடிக்கு வந்து விடுகின்றன. இதுகுறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருப்பதால், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com