பழைய அறிவிப்பு ரத்து: 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு..!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு TRB புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
Job vacancy
Job vacancy
Published on

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு தெரிவித்து வந்தது. அதன்படி, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி வெளியிடப்பட்டது. அந்த பணியிடங்களுக்கு பலரும் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்துசெய்து இருக்கிறது.

மொத்த பணியிடங்கள் :

மேலும் மேற்சொன்ன அதே கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கு ஏதுவாக ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பங்கள் திருத்தம் செய்ய நவம்பர் 11 முதல் 13, 2025 வரை அனுமதிக்கப்படும்.

உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதிகள் :

விண்ணப்பதாரர்கள் 2025 ஜூலை 1-ம்தேதி நிலவரப்படி 57 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உதவி பேராசிரியர் பணிக்கு தேசிய, மாநில தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருப்பது கட்டாயம்!
Job vacancy

விண்ணப்பத்தாரர் இந்தியப் பல்கலைக்கழகம் அல்லது அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு நிறுவனத்தில் தொடர்புடைய பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான மதிப்பெண்) முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

இந்த பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்களுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

உதவிப் பேராசிரியர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு லெவல் 10 அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :

ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி, அக்டோபர் 4-ந்தேதி மற்றும் 2024-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி விண்ணப்பித்த தேர்வர்கள் இந்த புதிய அறிவிக்கையின்கீழ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இவர்களுக்கு மட்டும் இப்புதிய விண்ணப்பத்திற்கான தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தும் மற்றும் வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மற்றபடி தேர்வுக் கட்டணம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ. 600ஆகவும் SC, SCA, ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் ரூ.300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் https://www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள உதவிப் பேராசிரியர் பதவிகள் 2025-க்கான இணைப்பைக் கிளிக் செய்து அங்கு தெரியும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்களுடைய விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி பின்னர் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தின் நகலைப் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
உடனே விண்ணப்பீங்க..! தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!
Job vacancy

மேலும் கூடுதல் தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ https://trb1.ucanapply.com/apply_now இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com