மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போ வரும்..? அமைச்சர் கீர்த்தனா சொன்ன குட் நியூஸ்..!

Minister S. Keerthana
Minister S. Keerthana
Updated on

தமிழகத்தில் தற்போது தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையில், விஜய் தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என கூறியிருந்தார். கடந்த திமுக அரசு மகளிர் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

அதன்படி, இந்த மாதம் (மே மாதம்) திமுக ஆட்சி காலத்தில் கிடைத்து வந்த ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்குமா அல்லது அது நிறுத்தப்படுமா அல்லது புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியான ரூ.2500 மகளிர் உரிமைத் தொகையாக கொடுக்கப்பார்களா என்று பெண்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கடந்த அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என விஜய் உறுதி அளித்திருந்தார். மேலும், மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவை என்றும் கூறினார்.

இந்நிலையில், எப்போதும் போல் 15-ம்தேதி (நேற்று முன்தினம்) குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு ரூ.1000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தது. அதாவது முந்தைய திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மே மாதத்திற்கான 1000 ரூபாய் பணத்தை தவெக அரசு, ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: வந்தாச்சு மகளிர் உரிமை தொகை.! தமிழக முதல்வர் விஜய் அதிரடி.!
Minister S. Keerthana

இதனால், தவெக தேர்தல் வாக்குறுதியான ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என்ற கேள்வியை பெண்கள் எழுப்பியுள்ளனர். இதற்கு அமைச்சர் கீர்த்தனா பதில் கொடுத்துள்ளார்.

அனைத்து ரேஷன் அட்டைத்தார்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா என்று கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கீர்த்தனா பேசும்போது, கண்டிப்பாக வழங்கப்படும் எனவும் கடந்த ஆட்சி போல ஏமாற்றமாட்டோம். கொடுத்த வாக்குறுதியின் படி அனைத்து தாய்மார்களுக்கும் தருவோம். ஆனால் நேரம் தந்தால் தான் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 திட்டத்தை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த முடியும். எங்களுக்கு தேவை அவகாசம் தான் என்று கூறியுள்ளார்.

ரூ.10.5 லட்சம் கோடி கடன் வாங்கிவைத்துவிட்டு சென்றுள்ளார்கள்; என்ன நடந்திருக்கிறது என்று எங்களுக்கு தெரிய வேண்டும்; கொஞ்சம் டைம் கொடுத்தீர்கள் என்றால், 2500 ரூபாய் மகளிர் உரிமை திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்றார்.

இதையும் படியுங்கள்:
நாளை 15-ம் தேதி: மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் ஏறுமா..? தவெக அரசின் முடிவை எதிர்பார்க்கும் பெண்கள்..!
Minister S. Keerthana

இதற்கிடையில், மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அவகாசம் தேவை எனவும் விஜய் கூறியுள்ளார். எனவே, நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகு, இது தொர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com