

நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். கிட்டதட்ட இரண்டரை மணிநேரம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய மரிய வில்சன் 12.31 க்கு உரையை நிறைவு செய்தார்.
இந்த பட்ஜெட்டில், ‘வெற்றி’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது என்பது வெள்ளை அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டதை சுட்டிக்காட்டினர். மேலும் மொத்த வரி வருவாயில் வட்டி அதிகரிப்பு- நிதி ஆதாரங்கள் குறைவாகவே உள்ளதை சுட்டிக்காட்டிய மரிய வில்சன், மற்ற இணை மாநிலங்களை ஒப்பிடுகையில் வருவாய் பற்றாக்குறையில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது என்றார்.
திருத்தப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.54 லட்சம் கோடியாக உள்ளது.
2026-27 மொத்த பட்ஜெட் - ரூ.350027 கோடி
வருவாய் பற்றாக்குறை - ரூ.55,775 கோடி
பட்ஜெட்டில் துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி: (நிதி ஒதுக்கீடு)
கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 'வெற்றி 150' அறிமுகம். மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்ய ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீர்வளத் துறைக்கு 9,264 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள் - ரூ.125 கோடி ஒதுக்கீடு
நதி இணைப்புத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு.
மனித-வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.38,000 கோடி கடன் வழங்க இலக்கு.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு 1,762 கோடி ரூபாய் ஒதுக்கீடு
புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான ‘வெற்றி வீடு’ திட்டம் அறிமுகம். வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.
தொழில்முனைவோரின் செயல்திறனை வெளிப்படுத்தும் சுயஉதவிக் குழு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு
உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைக்கு ரூ.17,290 கோடி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ரூ.23,375 கோடி ஒதுக்கீடு
இயற்கை வளங்கள் துறை ரூ. 438 கோடி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு
ஊரகவளர்ச்சி துறைக்கு ரூ.39,609 கோடி ஒதுக்கீடு
உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ,14,830 கோடி ஒதுக்கீடு
காவல் துறைக்கு ரூ.431 கோடி ஒதுக்கீடு
மருத்துத் துறைக்கு ரூ. 23.357 கோடி ஒதுக்கீடு
மகளிர் உரிமைத் துறைக்கு ரூ. 9,819 கோடி ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு
தொழில் வர்த்தக துறைக்கு ரூ.4414 கோடி ஒதுக்கீடு
உணத்திருவிழாக்கள் நடத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் நதி சுற்றுலா உருவாக்க ரூ.53 கோடி ஒதுக்கீடு
சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறைக்கு ரூ.775 கோடி ஒதுக்கீடு
ஆன்மிக தலங்களில் ரூ.60 கோடியில் ஓய்வு இல்லம்
ஒப்பந்தங்களில் கசிவுகளை தடுத்து ரூ.1500 கோடி வருவாயை உருவாக்க அரசு திட்டம்
சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறைக்கு- ரூ.775 கோடி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 39,609 கோடி ரூபாய் ஒதுக்கீடு
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு
போதையில்லா தமிழகம் உருவாக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு 17,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கு ரூ.775 கோடி ஒதுக்கீடு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21,524 கோடி ரூபாய் ஒதுக்கீடு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 11,532 கோடி ரூபாய் ஒதுக்கீடு
முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறைக்கு 475 கோடி ரூபாய் ஒதுக்கீடு
வணிக வரிகள் துறைக்கு 651 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.438 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ. 838 கோடி நிதி ஒதுக்கீடு.
ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு 47,240 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நீதி நிர்வாகத் துறைக்கு ரூ.2486 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்துத் துறைக்கு மொத்தம் ரூ.13,561 கோடி ஒதுக்கீடு.
டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடியினை ஊக்குவிக்க குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்த ரூ. 5.134 கோடி ஒதுக்கீடு
வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்கு 14,984 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம், 193 லட்சம் பாரம்பரிய மீனவர் குடும்பங்கள் பயனடையும்.