குட் நியூஸ்.!! குறையப்போகுது வீட்டுமனை விலை! தமிழக அரசின் மெகா அறிவிப்பு.!

வீட்டுமனை விலை
Real Estate
Updated on

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. கிராமங்களை விடவும் நகரங்களில் நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளின் விலை பல மடங்கு அதிகம். இதற்கு மிக முக்கிய காரணமாக அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் லே அவுட் அனுமதிக்கான கால தாமதத்தைக் கூறலாம். இதுதவிர ரியல் எஸ்டேட் துறையில் மனைகளின் விற்பனை விலை அதிகரிக்க விளம்பரங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன.

கடந்த வாரம் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்படி ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறல் இருந்தால் வீட்டுமனைத் திட்டத்திற்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் வீட்டுமனைகளின் விலையைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு மற்றுமொரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இனி வீட்டுமனை லே அவுட்டுக்கு விண்ணப்பித்தால் அடுத்த 27 நாட்களுக்குள் அனுமதி கிடைக்கும்.

முன்பெல்லாம் வீட்டுமனை விற்பனைக்கான லே அவுட்டுக்கு விண்ணப்பித்தால், அரசின் அனுமதி கிடைக்க மாதங்கள் மட்டுமல்ல ஆண்டுக் கணக்கிலும் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. பெரும்பாலான வீட்டுமனை விற்பனையாளர்கள், வங்கியில் கடன் வாங்கியே லே அவுட்டை உருவாக்குகின்றனர்.

ஆனால் வீட்டுமனை விற்பனை லே அவுட்டுக்கு தமிழக அரசின் அனுமதி கிடைக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழலில், கடனுக்கான வட்டித் தொகையை, வீட்டுமனை விற்பனை விலையில் சேர்த்து விடுகின்றனர். இதனால் வீட்டுமனையின் விற்பனை விலையும் கணிசமாக உயர்கிறது.

இந்நிலையில் தற்போது வீட்டுமனை விற்பனைக்கான லே அவுட்டுக்கு அனுமதி வழங்கும் கால அவகாசத்தை தமிழக அரசு 27 நாட்களாக குறைத்துள்ளது. இதன்படி வீட்டுமனை விற்பனையாளர்கள் வாங்கும் கடனுக்கான வட்டியும் பெருமளவு குறையும். இதனால் வீட்டுமனையின் விற்பனை விலை சதுர அடிக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை குறையும் என கட்டுமானத் தொழிலாளர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கட்டுமானத் துறையினர் மற்றும் வீட்டுமனை விற்பனையாளர்களுடன் தமிழக அரசு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கட்டுமானத் துறை சம்பந்தப்பட்ட ஒப்புதல்கள் தாமதமின்றி கிடைக்கும் எனவும், யாரும் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதோடு வீட்டுமனை விற்பனைக்கான லே அவுட்டுக்கு விண்ணப்பித்தால், அடுத்த 5 நாட்களுக்குள் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவார்கள். அரசின் நடைமுறைகளின் படி 27 நாட்களுக்குள் அனுமதியும் கிடைக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு மனை
Real Estate
இதையும் படியுங்கள்:
ஜாக்பாட் ஆஃபர்..! 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை.!
வீட்டுமனை விலை

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் நகர்ப்புறங்களில் வீட்டுமனைகளின் விலை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கட்டுமானத் துறையினரும் உறுதிப்படுத்தி இருப்பதால், வீட்டுமனை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது அமைந்துள்ளது.

வீட்டுமனை விளம்ரங்களில் விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது லே அவுட் அனுமதிக்கான கால அவகாசத்தைக் குறைத்திருப்பது கட்டுமானத் துறையினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசுத் துறையில் லஞ்சம் ஒழிக்கப்படும் என தமிழக முதல்வர் தலைமையிலான தவெக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதற்கேற்ப அரசு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது என கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மின்வெட்டுக்கு குட்-பை.! தமிழ்நாடு முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு.!
வீட்டுமனை விலை
logo
Kalki Online
kalkionline.com