ஜாக்பாட் ஆஃபர்..! 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை.!

தங்கம் விலை
Gold Price
Updated on

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் திடீர் உயர்வை சந்தித்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே சரிவை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக நேற்று மட்டும் இரண்டு முறை தங்கத்தின் விலை சரிந்தது.

தொடர்ந்து 3-வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ள நிலையில், வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.5 குறைந்தது. கடந்த வாரத்தில் மட்டும் ரூ.6,000-க்கும் மேல் உயர்ந்த தங்கத்தின் விலை, கடந்த 3 நாட்களில் ரூ.3,600 வரை சரிந்துள்ளது. தங்கத்தின் இந்த சரிவு, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஜூலை 08) தங்கம் ஒரு சவரன் ஒட்டுமொத்தமாக ரூ.1,200 சரிந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,250-க்கும் விற்பனையானது. 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,45,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 09) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது

கடந்த ஆண்டு இதே நாள் ஜூலை 9-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,000-க்கும், 1 கிராம் ரூ.9,000-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓராண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.

2025 ஜூலை 9-ல் 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓராண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
நலம் AI: அரசு மருத்துவமனைகளில் ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?
தங்கம் விலை

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 08: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000

ஜூலை 07: 1 கிராம் - ரூ.13,400 1 சவரன் ரூ.1,07,200

ஜூலை 06: 1 கிராம் - ரூ.13,560 1 சவரன் ரூ.1,08,480

ஜூலை 05: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

ஜூலை 04: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 08: 1 கிராம் - ரூ.245

ஜூலை 07: 1 கிராம் - ரூ.250

ஜூலை 06: 1 கிராம் - ரூ.250

ஜூலை 05: 1 கிராம் - ரூ.260

ஜூலை 04: 1 கிராம் - ரூ.260

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது உச்சத்தில் இருந்தாலும், ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வருகிறது. பிரதமர் மோடியின் வலியுறுத்தலுக்குப் பின், சாமானிய மக்கள் நகை வாங்குவதைக் குறைத்துள்ளனர். இருப்பினும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளதால், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
மின்வெட்டுக்கு குட்-பை.! தமிழ்நாடு முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com