

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனர். இதில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு சுமார் 4.20 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சிறப்பு மகப்பேறு மையங்களில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டதிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணபிப்பது எப்படி?
இருப்பிடம்: தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
பிரசவ இடம்: அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு மகப்பேறு மையங்களில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இச்சலுகை வழங்கப்படும்.
பாலின பாகுபாடின்மை: ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற எந்தவித பாலின வேறுபாடுமின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
பிரசவ எண்ணிக்கை நிபந்தனையற்றது: தாய்மார்களுக்கு இது எத்தனாவது பிரசவம் (HOB - High Order Birth) என்ற எந்த நிபந்தனையோ அல்லது கட்டுப்பாடோ இன்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.
முந்தைய தேதியிட்ட குழந்தைகளுக்கும் சலுகை: ஜூன் 22-ஆம் தேதி முதல் திட்டம் தொடங்கப்பட்ட நாள் வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் விடுபடாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட 107 மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 100 குழந்தைகள் வீதம் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் மோதிரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
நேரடி விநியோகம்: திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்து குழந்தையுடன் வீடு திரும்பும் போதே தாய்மார்களிடம் மோதிரம் நேரடியாக ஒப்படைக்கப்படும்.
முக்கியமான நிபந்தனை & பதிவு முறை: இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கர்ப்பிணித் தாய்மார்கள் கட்டாயம் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) அமைப்பில் தங்களது கர்ப்பத்தைப் பதிவு செய்து, RCH அடையாள எண் (Reproductive and Child Health ID) பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
திட்டத்திற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருப்பிடவாசிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இச்சலுகை வழங்கப்படும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் கட்டாயம் RCH ID உடன் PICME (பிக்பாஸ்) தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் அனைவரும் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.
கர்ப்பிணிகளுக்கு உயர்வரிசை பிரசவம் (HOB) என்ற நிபந்தனையோ அல்லது குழந்தை ஆண், பெண் என்ற பாலின பாகுபாடே இல்லாமல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
RCH அடையாள எண் கொண்ட PICME சான்றிதழ்
தாய் மற்றும் தந்தையின் அடையாளச் சான்றுகள் (வாக்காளர் அடையாள அட்டை / குடும்ப அட்டை / தொழிலாளர் நல அடையாள அட்டை / அஞ்சல் முகவரிச் சான்று)
இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் (மருத்துவமனை மூலம் பெறப்படும்)
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் அட்டை
தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை
அஞ்சல் துறையின் முகவரி சான்று அட்டை
பிறப்பிடச் சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் கட்டாயம் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பின்னணி & கொள்முதல் விவரங்கள்:
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனர். இதில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன. இதில் சுமார் 4.20 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.
முதற்கட்டமாக இத்திட்டத்திற்காக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
முறைகேடுகளைத் தவிர்க்க ஒவ்வொரு தங்க மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண் (Unique Serial Number) மற்றும் பாதுகாப்பான பேக்கேஜிங் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது.