டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆகியவற்றின் நிறுவரரான எலான் மஸ்க் தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எலான் மஸ்க். ஆகையால் ட்ரம்பின் இந்த வெற்றிக்கு பின்னர் டெஸ்லா நிறுவன பங்குகள் 65 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் அவரது மற்ற நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தது. இதனால் அவரின் சொத்து மதிப்பும் கூடியுள்ளது.
அதாவது ப்ளூம் பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 37 லட்சம் கோடி என்பது தெரியவந்துள்ளது.
ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் 1.25 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர் உயர்ந்து 440 பில்லியன் டாலராக மாறியுள்ளது.
மேலும் ஒரு ஒப்பந்தம் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 350 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதனால் தனிப்பட்ட முறையில் எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் மட்டுமல்ல எக்ஸ் ஏஐயும் தான் இந்த சொத்து மதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணம்.
ஆகமொத்தம் இந்த ஆண்டு மட்டும் எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பில் 218 டாலர்களை சேர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிநவீன AI தொழில்நுட்பங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் உலகளவில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எலான் மஸ்க்கின் இந்த சாதனை மிகவும் அசாதாரணம் என்றாலும், இதற்கு பல சவால்களையும் எதிர்க்கொண்டிருக்கிறார். டெலாவேர் நீதிமன்றம் சமீபத்தில் $100 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள டெஸ்லா ஊதியப் பொதியை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.