புயலால் கிடைக்கும் தங்கம்… மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆந்திரா மக்கள்!

Gold in Andhra beach
Gold in Andhra beach
Published on

நிவார் புயலுக்கு பின் ஆந்திராவில் உள்ள உப்பாடா பகுதியில் நிறைய தங்கம் கிடைத்திருக்கிறது. எப்படி என்றுதானே யோசிக்கிறீர்கள்??

சென்னையையே புரட்டிப் போட்ட நிவார் புயல், ஆந்திரா மக்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் 27 வரை புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையை கடந்தது இந்த நிவார் புயல். இந்த புயலினால் புதுச்சேரி சென்னை மற்றும் ஆந்திராவில் பல இடங்களில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டன. தமிழகத்தை ஆட்டிப் பார்த்த இந்த புயலினால் ஆந்திரா தற்பொழுது பயனடைந்து வருவதாக வெளியாகி இருக்கும் இந்த செய்தி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்! ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா வருவாய் கூட்டத்திற்குள் அமைந்திருக்கக் கூடியது இந்த உப்பாடா கடற்கரை.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில உணவுப் பழக்கங்கள்!
Gold in Andhra beach

இந்த கடற்கரையில்தான் ஏராளமான தங்கம் கிடைக்கிறது என்றும், அங்குள்ள மக்கள் அந்த கடற்கரையில் தங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு  வருவதாகவும் ஆந்திரா அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த கடற்கரையில் கடல்நீர் சீற்றத்துடன் காணப்பட்டதாம். இதனையடுத்து தற்போது அமைதி நிலைக்கு மாறியுள்ளது. அந்நேரத்தில் கடற்கரையில் இருந்து தங்கமணிகள் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இந்த கடற்கரை மணலில் இருந்து தங்க தாது துகள்கள் சிறிய தங்க நகைகள் கிடைக்கிறது இதனால் மக்கள் பலரும் இந்த கடற்கரைக்கு வந்து தங்கம் தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையின் உயர்வுக்கு மகிழ்ச்சிதான் மூலதனம்!
Gold in Andhra beach

புயலினால்  கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள் கோவில்களில் இருந்திருக்க கூடிய தங்கமாக இருந்திருக்கலாம். இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இதற்கு முன்பு புதிதாக கோவில் மற்றும் வீடுகள் கட்டும்போது இந்த கடற்கரையில் வந்து தங்கத்தை புதைத்துவிட்டு பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்போது புதைக்கப்பட்ட தங்கம் தற்போது மக்கள் கைகளில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த கடற்கரையில் தற்பொழுது பலருக்கும் தங்கம் கிடைத்து வரும் நிலையில் இந்த கடற்கரையை சுற்றுலாத்தலமாக மாற்ற ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

உப்பாடா, சுரதா பேட்டை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வசிக்கும் மக்கள் கடற்கரையில் மணலை சல்லடை செய்துத் தங்கத்தை அள்ளி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com