சடலமாக அறிவிக்கப்பட்டவர் பிணவறையில் உயிருடன் கண்டுபிடிப்பு!

Mortuary
Mortuary
Published on

கண்ணூர்: கண்ணூர் ஏகேஜி மருத்துவமனையின் பிணவறையில் 67 வயது முதியவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குடும்பத்தினரையும், மருத்துவமனை ஊழியர்களையும், அப்பகுதி மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கண்ணூர், பச்சபொய்க்கா பகுதியைச் சேர்ந்த வெள்ளுவக்கண்டி பவித்ரன் என அடையாளம் காணப்பட்ட இவர், கடுமையான இதயம் மற்றும் நுரையீரல் நோய்க்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்து வந்துள்ளது.

மேலும் அவர் வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டார். மருத்துவச் செலவுகள் அதிகரித்து வந்ததால், அவரை ஜனவரி 13ஆம் தேதி திங்கட்கிழமை சொந்த ஊருக்கு அழைத்து வர குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

வென்டிலேட்டர் ஆதரவு இல்லாமல் பவித்ரன் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை என்றும், அதை அகற்றிய பத்து நிமிடங்களில் அவர் இறந்துவிடுவார் என்றும் மங்களூரில் உள்ள மருத்துவர்கள் குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்:
இளவட்டக்கல் தூக்கும் போட்டி: ஆண்களுக்கு நிகராக சாதனை படைத்து வரும் பெண்கள்! பலே பலே!
Mortuary

அவரை டிஸ்சார்ஜ் செய்த பிறகு, பவித்ரன் உயிர் வாழ்வதற்கான அறிகுறிகளை காட்டவில்லை, மிகக் குறைந்த இரத்த அழுத்தம் உட்பட, அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் நம்பி விட்டனர்.

அவர்களது கிராமத்தை அடைந்ததும், ஏ.கே.ஜி மருத்துவமனை சவக்கிடங்கில் உடலை வைத்து, ஜனவரி 14 செவ்வாய்கிழமை திட்டமிடப்பட்ட இறுதிச் சடங்குகளுக்குத் தயார்படுத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இருப்பினும், ஆம்புலன்ஸ் பிணவறைக்கு வந்தபோது, ​​​​திடுக்கிடும் நிகழ்வு நடந்தது. பிணவறை உதவியாளர் ஜெயன், பவித்ரனின் கை அசைவதைக் கவனித்தார்.

இந்த எதிர்பாராத  அதிர்ச்சியால்  எச்சரிக்கையடைந்த ஜெயன், மருத்துவமனை எலக்ட்ரீஷியன் அனூப்பை உதவிக்கு அழைத்தார்.

ஊழியர்கள் உடனடியாக பவித்ரனின் குடும்பத்தினருக்கும், மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், பவித்ரனின் ரத்த அழுத்தம் சீராக இருந்தது தெரியவந்ததால், உடனடியாக மேல் சிகிச்சைக்காக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

ஜனவரி 15 புதன்கிழமை யன்று ஏகேஜி மருத்துவமனையின் மருத்துவர்கள், பவித்ரனின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், சிகிச்சைக்கு சாதகமாக இருக்கிறது என்று கூறினர்.

அவரது பெயர் அழைக்கப்பட்டபோது அவர் கண்களைத் திறந்தார் மற்றும் முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் காட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: முக்கிய குற்றவாளி கைது!
Mortuary

உள்ளூர் செய்தித்தாள்கள் ஏற்கனவே பவித்ரனின் புகைப்படத்துடன் இரங்கல் செய்திகளை வெளியிட்டிருந்தன. மேலும் பல நலம் விரும்பிகள் அவரது வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க வந்திருந்தனர். 

இந்த அதிசய நிகழ்வு குறித்து பலர் அவநம்பிக்கையையும் நிம்மதியையும் வெளிப்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தற்போது ஊரின் பேச்சாக மாறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com