நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

Loksabha Election 2024
Election 2024
Published on

இந்தியா முழுவதும் 18வது லோக்சபா தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்றுத் தொடங்கியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட நாட்டின் பல இடங்களில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 64 சதவீத மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள். முதற்கட்ட வாக்குப்பதிவில், 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதனைத்தொடர்ந்து, 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. அதாவது, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கு 15.88 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்குப்பதிவை ஒட்டி 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 16 லட்ச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 88 தொகுதிகளில், சென்றமுறை பாஜக 48 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும், சிவசேனா 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஐயுஎம்எல் 2 தொகுதிகளிலும், சிபிஎம் 1 தொகுதியிலும் வெற்றிபெற்றன.

கேரளாவைப் பொறுத்தவரை ஒரு ஜனநாயகக் கூட்டணி கட்சிக் கூட வெற்றிபெறவில்லை. இன்று கேரளாவில் நடக்கும் வாக்குப்பதிவில் அதிகபட்சமாக வெளிநாட்டு வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம், 89, 839 வெளிநாட்டு வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், கேரளா, சட்டீஸ்கர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆண்களை விட பெண்களே அதிக அளவு வாக்குப்பதிவு செய்யவுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
உக்ரைனுக்கு அமெரிக்கா 5 லட்சம் கோடி நிதியுதவி செய்கிறதா? வெளியான தகவல்!
Loksabha Election 2024

கேரளாவில் இடதுசாரி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டியே. அங்கு பாஜகாவிற்கு இடமில்லை என்றாலும், இம்முறை ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற வேண்டும் என்று பாஜக தீவிரமாக செயல்படுகிறது. அதேபோல் கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாஜகாவிற்கும்தான் நேரடி மோதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com