BSLV C-60 என்ற ராக்கெட் நேற்று முன்தினம் ஏவப்பட்ட நிலையில், அது நட்சத்திரத்தைத் துறத்துவது போன்றக் காட்சி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
இஸ்ரோ அவ்வப்போது ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ‘பாரதிய அந்தரி க்ஷாஸ் டேஷனை’ நிறுவ உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஸ்பேடெக்ஸ்’ என்ற திட்டம் உள்ளது.
அதன் மூலம் விண்வெளியில் உள்ள விண்கலன்களை ஒருங்கிணைக்க உள்ளது. இதற்கு இரண்டு விண்கலன்களை இஸ்ரோ தலா 220 கிலோ எடை கொண்டு வடிவமைத்தது. இதற்கான 14 ஆய்வுக் கருவிகள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்தது. மீதமுள்ள 10 கருவிகளை கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்திருக்கிறது.
பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு விண்கலன்களும் நிலை நிறுத்தப்பட உள்ளன. இந்த இரண்டையும் சுமந்து கொண்ட BSLV C – 60 என்ற ராக்கெட் நேற்று முன்தினம் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த திட்டம் நிறைவேறினால், அதாவது விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைத்தால், இந்த சாதனையை படைத்த 4 வது நாடு இந்தியா என்ற பெருமை சேரும். இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் விண்கலன்களை ஒருங்கிணைத்து சாதனைப் படைத்திருக்கிறது.
ஒருவேளை இந்த திட்டம் வெற்றியில் முடிந்தால், விண்வெளியில் தனி ஆய்வு மையம் அமைப்பதற்கும், ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணில் அனுப்புவதற்கும், சந்திரயான் 4 திட்டம் மூலம் நிலவில் ஆய்வு மேற்கொள்ளவும் இந்த விண்கலன்களை ஒருங்கிணைக்கும் SPACE DOCKING திட்டம் வெற்றிபெரும் என்றும், நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பவும் இது உதவியாக இருக்கும்.
அந்தவகையில் இந்த விண்கலம் விண்ணில் செல்லும்போது நட்சத்திரம் பின்னே போகும் காட்சி, எதோ நட்சத்திரத்தை துறத்துவது போல உள்ளது. இந்த வீடியோ பார்ப்போரை வியக்க வைக்கிறது.
இதனைத்தொடர்ந்து இரண்டு விண்கலங்களும் வெற்றிகரமாக பிரிந்திருப்பது தெரியவந்துள்ளது.