உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சாலை இந்தியாவில்தான் உள்ளது. வாருங்கள் எங்கே இருக்கிறது? எவ்வளவு நீளம் என்று பார்ப்போம்.
இந்தியா மிகப்பெரிய நாடு என்பதால், பல அற்புதங்களும் நிறைந்த நாடு இந்தியா என்று கூறலாம். கட்டடக்கலைக்கும் கலைக்கும் பெயர்ப்போன நாடு இந்தியா. அதேபோல் பெரிய பெரிய மலைகளும் காடுகளும் நிறைந்த பசுமைமிக்க நாடு மற்றும் பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. அந்தவகையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலை இந்தியாவில்தான் உள்ளது. லடாக்கின் உம்லிங் லா என்ற கணவாய் வழியே அமைக்கப்பட்டுள்ள சாலைதான் உலகின் மிக உயரமான மோட்டார் வாகன பயன்பாட்டு சாலையாக உள்ளது.
இதன் நீளம் 52 கிலோ மீட்டர். உயரம் கடல் மட்டத்திலிருந்து 19,024 அதாவது 5799 மீட்டர் உயரத்தில் உள்ளது.
சுமார் 6.7 மில்லியன் கிமீ தூரத்தை உள்ளடக்கிய உலகளவில் இரண்டாவது பெரிய சாலை இதுவே ஆகும். இந்த பரந்த பகுதிக்குள் 19 ஆயிரம் அடிக்குமேல் உயரத்தில் இந்த சாலை இருக்கும்.
இந்த சாலை சிந்து நதிக்கும் கோயுல் லுங்பாவுக்கும் இடையே செல்கிறது. மேலும் இது சிசுமாலேவை டெம்சோக்குடன் இணைகிறது.
லடாக்கில் உள்ள இந்தச் சாலையை 2021ம் ஆண்டு இந்தியாவின் எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) லடாக்கில் உள்ள உம்லிங் லா பாஸில் சாலையை உருவாக்கியது. இதில் 52 கிமீ சாலை எவரெஸ்ட் சிகரத்தின் முகாம்களை விட உயரமான இடத்தில் அமைந்துள்ளது.
இதனையடுத்து நேபாளத்தில் உள்ள சவுத் பேஸ் கேம்ப் 17,598 அடி உயரத்திலும், திபெத்தில் உள்ள நார்த் பேஸ் கேம்ப் 16,900 அடி உயரத்திலும் உள்ளது.
உம்லிங் லாவில், கோடைக் காலத்தில் -10 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதேபோல் குளிர்காலத்தில் -40 டிகிரி செல்சியஸில் உள்ளது. இந்த உயரத்தில் ஆக்ஸிஜன் அளவு கடல் மட்டத்தை விட 50% குறைவாக உள்ளது.