இபிஎஸ் முதல்வரானது இப்படித் தான்.! ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்.!

EPS - Sengottaiyan
Sengottaiyan
Updated on

ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு அதிமுகவின் அடுத்த முதல்வராக வரவேண்டிய தகுதியும், வாய்ப்பும் செங்கோட்டையனுக்குத் தான் அதிகமாக இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனது, பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

ஜெயலலிதா சிறைக்கு சென்ற போதெல்லாம், தமிழக முதல்வராக செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அவருக்கும் முதல்வர் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் வாய்ப்பு கிடைத்தும், ஏமாந்து விட்டுவிட்டேன் என செங்கோட்டையன் பலநாள் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தொகுதி மறுவரையறை: தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது - மத்திய அரசு உறுதி!
EPS - Sengottaiyan

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் செங்கோட்டையன், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய பிரச்சாரத்தின் போது, இரவு வரைக்கும் நான் தான் முதல்வர்; காலையில் எல்லாம் மாறிப் போனது என உண்மையை உடைத்துள்ளார்.

இதுகுறித்து செங்கோட்டையன் கூறுகையில், “ஜெயலலிதா இறப்புக்கு பிறகு, அன்றைய இரவு வரை நான் தான முதல்வர் என சசிகலா தெரிவித்தார். ஆனால் காலையில் எல்லாமே மாறிப் போனது. ஏனென்றால் எடப்பாடியிடம் பெட்டி அதிகமாக இருந்தது. அவர் கெஞ்சித் தான் முதல்வர் ஆனார். சரி கட்சி உடையாமல் இருக்க வேண்டும்ஸென நானும் ஒப்புக் கொண்டேன்” என உண்மையை உடைத்துப் பேசியுள்ளார் செங்கோட்டையன்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: பரபரக்கும் அரசியல் களம்: சீமானை எச்சரித்த செல்வப்பெருந்தகை - என்ன நடந்தது?
EPS - Sengottaiyan

தவெக-வில் இணைந்த பிறகு, விஜய்யை முதல்வராக்கி விட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன், தற்போது பல ஆண்டு கால ரகசியத்தை உடைத்திருப்பது, அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com