2024ம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டு மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்பட்ட ஆரோக்கியா உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் நமது முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தார்கள். இதனால் பல காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து இறந்தாரகள். ஆனால், இடையில் சில காலம் ஆரோக்கியமற்ற உணவுகள் சுவையாக இருக்கிறது என்று மக்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் இளம் வயதிலேயே நோய்வாய்பட்டு இறந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு கணக்குப்படி பார்த்தால், மீண்டும் மக்கள் ஆரோக்கியமான உணவுகளையே எடுக்க ஆரம்பித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆம்! இந்தாண்டு அதிகம் சாப்பிடப்பட்ட உணவுகளில் பாதாம் பருப்பு முதலிடத்தில் உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் கொட்டிக் கிடப்பதால், மக்கள் இதனை விரும்பி அன்றாடம் சாப்பிடுவது தெரியவந்துள்ளது.
அடுத்ததாக முந்திரி உள்ளது. முந்திரியில் புரதச்சத்து, நல்ல கொழுப்பு, தாது உப்புகள் மேலும் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள் ஆகியவை உள்ளன. இதனால், பலர் முந்திரியை எடுத்துக்கொள்கிறார்கள்.
இதனையடுத்து நார்ச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின்கள் அதிகம் இருக்கும் துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பருப்பு வகைகள் அதிகம் மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சைவ உணவுகளில் புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வகையாக பருப்பு வகைகள் உள்ளன.
பக்வீட் அடுத்த இடத்தில் உள்ளது. இந்த குட்டி தானியம் இந்தாண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குளுட்டன் இல்லாத இந்த தானியத்தில், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளன. கோதுமை மாவுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்குகிறது.
மேலும் தாவர அடிப்படையிலான உணவுகள். அதாவது பருப்பு வகைகள், விதைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும், இறைச்சி மற்றும் பால் போன்றவையும் மக்களால் அதிகம் சாப்பிடப்பட்டுள்ளன.
அதேபோல் கேழ்வரகு, சாமை, கம்பு போன்றவையும் மீண்டும் ஆரோக்கிய உணவு பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பானங்களில் கொம்புச்சா, க்ரீன் டீ, மூலிகை பானங்கள் போன்றவை மீண்டும் அதிகம் பருகப்படுகின்றன.
அதேபோல் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இது பல வகைகளில் நன்மை பயக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.