காமராஜர் பிறந்தநாளில் காங். கட்சிக்குள் பயங்கர அடிதடி! எம்பி முன்னிலையிலேயே நடந்த மோதல்..!

காங்கிரஸ் நிர்வாகிகள்
காங்கிரஸ் நிர்வாகிகள்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

திருநெல்வேலியில் காங்கிரஸ் அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காமராஜரின் பிறந்தநாள் உறுதிமொழி ஏற்பு விழாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கேமரா முன்னால் நிற்பது மற்றும் புகைப்படம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பயங்கர மோதல்,கைகலப்பாக மாறியது .

பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் முன்பு இருக்கும் காமராஜர் மற்றும் இந்திரா காந்தி சிலைகளுக்கு அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் அவர்கள் காங்கிரஸ் ஆட்சி அமையவும், லஞ்ச ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டுமென்ற உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர்களான சங்கரபாண்டியன் மற்றும் அ. உமாபதி சிவன் ஆகியோருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் மாவட்ட தலைவர்களாகிய சங்கர பாண்டியன் மற்றும் அ. உமாபதி சிவன் ஆகியோருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சங்கர பாண்டியன் அனைவரையும் பின்னோக்கி தள்ளி செயல்பட சங்கர பாண்டியன் மற்றும் உமாபதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அத்துடன் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் தலைவர்கள் வாக்குவாதமும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக் கொண்டதும் நடைபெற்றது அப் பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே உட்கட்சி பூசல் காரணமாக பேசப்படும் நிலையில் இந்த நிகழ்வு திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.

சங்கர பாண்டியன் மற்றும் உமாபதி சிவன் இருவருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் தான் ஏற்பட்டது. அதுவே பின்னர் அடிதடியாக மாறியது.காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, கேமரா/ புகைப்படம் எடுப்பதற்காக முன்னால் வந்து நிற்பதில் இருதரப்பு நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட போட்டி மற்றும் அத்துமீறலே இந்த மோதலுக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முன்னிலையிலேயே, கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவர் காமராஜர் சிலை முன்பாகவே ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டது அங்கிருந்த தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஏற்கெனவே உட்கட்சிப் பூசல்களுக்குப் பெயர் போன காங்கிரஸ் கட்சியில், அதுவும் காமராஜரின் பிறந்தநாளில் அரங்கேறிய இந்த அடிதடிச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா மேடையிலேயே நடந்த இந்த பயங்கர மோதலின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
அலுமினியமா ஸ்டீலா, எது பெஸ்ட்னு தெரியாம குக்கர் வாங்காதீங்க!
காங்கிரஸ் நிர்வாகிகள்
இதையும் படியுங்கள்:
Interview: அருள்நிதிக்கு ஏன் கருணாநிதி பெயர்? - அருள்வான் இயக்குனர் கணேஷ் விநாயகன் Open Talk!
காங்கிரஸ் நிர்வாகிகள்
logo
Kalki Online
kalkionline.com