#BREAKING: வந்தாச்சு 10th ரிசல்ட்.! முதலிடத்தை தட்டி சென்ற மாவட்டம் எது தெரியுமா?

Tamilnadu 10th Results
10th Results
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

கடந்த மே 8-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று (மே 20) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில், +2 தேர்வு முடிவுகளை வாட்ஸ்அப்பில் பார்க்கும் வண்ணம் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் வாட்ஸ்அப்பில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தன. செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்பட்டன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 8,70,646 பள்ளி மாணவர்களும், 26,196 தனித்தேர்வர்களும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.

சற்றுமுன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், துணை நின்ற பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார் அமைச்சர் ராஜ்மோகன்.

ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதம் - 94.31%

ஆண்கள் - 92.15%

பெண்கள் - 96.47%

5,171 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

1,931 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

புதுக்கோட்டை 97.57%

இதுதவிர பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் குறுஞ்செய்தியாகயும் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, வாட்ஸ்அப்பில் 78452 52525 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் - என்னென்ன வாய்ப்புகள்? மாணவர்களே, இத தெரிஞ்சுக்கோங்க!
Tamilnadu 10th Results

ஆன்லைனில் தேர்வு முடிவுகளை பார்க்கும் வழிமுறை:

1. ​முதலில் tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in உள்ளிட்ட இணையதளங்களுக்குச் செல்ல வேண்டும்.

2. SSLC (10) Examination Results March/April 2026 என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3. மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

4. விவரங்களை சமர்ப்பித்த உடன், மாணவர்களின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் திரையில் தெரியும்.

அதோடு DigiLocker வழியாக தற்காலிக சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு மாணவர்கள் 14417 என்ற எண்ணை அழைக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில், மனநல ஆலோசனைகளைப் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14416 அல்லது 104 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி இந்தப் படிப்புகளை ஆன்லைனில் படிக்க முடியாது! யுஜிசி அதிரடி உத்தரவு!
Tamilnadu 10th Results
logo
Kalki Online
kalkionline.com