

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 5-ம்தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று வினாக்கள் - விடைகள் நேரம் கிடையாது என்றும், 8 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று அமைச்சர்கள் பதிலுரை அளிக்கவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை விவாதம்
இன்று சட்டசபை தொடங்கியதும் திமுக கொறடா எ.வ.வேலு உரையாற்றினார்.
பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார். அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார். நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.
நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.
அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ED வழக்கு குறித்து முதலமைச்சர் விஜய் பேசியுள்ளர் என்று எ.வ. வேலு கூறினார்.
கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்ற சர்க்காரியா கமிஷன் கூறிவிட்டது என்று எ.வ. வேலு கூறினார். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு தொடர முடியாது என சர்க்காரிய கமிஷன் கூறிவிட்டது என்று எ.வ. வேலு கூறினார்.
மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் .
மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் முக ஸ்டாலின்.
ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் ஓராண்டு சிறையில் இருந்தார்.
சட்டசபையில் முதலமைச்சர்கள் கண்ணியமாவே பேசுவர். மேலும் சட்டசபையில் இல்லாத ஒருவரை பற்றி பேசக்கூடாது என்பது விதி.
முதமைச்சர் விஜய்க்கு மாறன் குடும்பம் மிக மிக வேண்டிய குடும்பம். நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது என்றார்.
ஆதாரமின்றி முதலமைச்சர் விஜய் பேசியதை சீக்க வேண்டும் என்று எ.வ. வேலு கூறினார்.
இதற்கு பதில் உரை பேசிய அமைச்சர் தவெக அமைச்சர் நிர்மல் குமார், மறைந்த திமுக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எங்கு எங்கெல்லாம் பணம் வாங்கினார் என சர்க்காரிய கமிஷன் கூறியுள்ளது என்றார்.
கருணாநிதி மீதான 6 குற்றச்சாட்டுகளுக்க ஆதாரம் உள்ளது, சிபிஐ வழக்கு உள்ளது.
அதேபோல் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்பதற்கு எந்த குறிப்பும் இல்லை.
பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவதூறாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்திரா காந்திம் 21-வது அம்ச திட்டம் ஒன்று உள்ளது என ஸ்டாலின் அவதூறாக பேசினார்.
மிசா குறித்த அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
எ.வ. வேலு பேசினால் நாங்களும் விரிவாக பேச வேண்டியிருக்கும் என்று கூறியஅமைச்சர் செங்கோட்டையன், சர்க்காரியா கமிஷன் குறித்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசியது அவை குறிப்பில் உள்ளது என்றார்.