பெண்களுக்கு ஜாக்பாட்.. இலவச கறவை மாடுகள் - திருமணமாகும் பெண்களுக்கு 1 சவரன் தங்க நாணயம்..!

மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல்
மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல்
Updated on
  • மகப்பேறு நாள் நெருங்கும் போது தங்கி இருந்து பயன்பெறும் வகையில் தாய் கேர் திட்டம் - ரூ.23 கோடி ஒதுக்கீடு

  • வெற்றி ஆடு வளர்ப்பு திட்டம் - 30 ஆயிரம் பெண்களுக்கு 5 ஆடுகள்

  • வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் - ரூ.110 கோடி ஒதுக்கீடு

  • 10 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் - ரூ.59 கோடி ஒதுக்கீடு.ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும். இதற்காக 57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் பால் உற்பத்தி அதிகரிக்கப்படும். ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்

  • முதலமைச்சர் தாய் கேர் திட்டம் - ரூ.23 கோடி ஒதுக்கீடு

  • திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை அண்ணனின் சீர் வரிசை திட்டடத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு

  • சென்னை மாநகரில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டரில் நவீன மின்சார சேவை

  • குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் மானியம் - ரூ.5 கோடி ஒதுக்கீடு

  • அனைவருக்கும் தரமான வீடு- ரூ.1253 கோடி ஒதுக்கீடு

இந்த தேர்தலில் தவெக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் அண்ணன் சீர் திட்டம். இது பெண்களின் திருமணத்திற்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டமாகும். அதன்படி இத்திட்டத்தின் கீழ் தகுதியான ஏழை மற்றும் நடுத்தரப் குடும்பத் தங்கைகளின் திருமணத்திற்கு அண்ணனின் சீராக 8 கிராம் தங்கம்  மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதேபோல் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது.

கான்கிரீட் வீடுகள் கட்ட இதுவரை அரசு ரூ.3.10 லட்சம் கொடுத்த நிலையில் தற்போது ரூ.5 லட்சமாக உயர்வு என அறிவிப்பு

நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

வெற்றி வீடு திட்டம்- நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70,000 கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

சுய உதவி குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.38,000 வங்கி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம்

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்

மகளிருக்காக சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம் தொடங்கப்படும். இதில் ரூ.5 லட்சம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். இந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ. 38,000 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும்.

மகளிர் சுய உதவிக்குழு - ரூ.38000 கோடி கடன இலக்கு

தரமான பொது விநியோகம் திட்டம்- ரேசன் கடைகளில் பாக்கெட் கோதுமை மாவு வழங்கும் திட்டம் - ரூ.18 கோடி ஒதுக்கீடு

logo
Kalki Online
kalkionline.com