#BREAKING: தமிழக அமைச்சரவை விரிவாக்கம்..! பட்டியலை வெளியிட்டது ஆளுநர் மாளிகை.!

TN Cabinet
TVK Vijay
Updated on

தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்ற போதே, அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். சமீபத்தில் விஜய் உட்பட 9 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது 23 புதிய அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்க உள்ளனர். இதில் 3 பேர் பெண்கள். இந்த 23 பேரும் புதிதாக அமைச்சராக உள்ளவர்கள். இந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பங்கேற்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்கப்படும் என முன்பு செய்திகள் வெளியான நிலையில், நேற்று இதற்கு தவெக மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக அமைச்சரவையில் இடம் பெறாது என திருமாவளவனும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தவெக-விற்கு ஆதரவளித்த கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்தது. கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜயலட்சுமி - தவெக

ரஞ்சித் குமார் - தவெக

மதனராஜா - தவெக

மரிய வில்சன் - தவெக

ஸ்ரீநாத் - தவெக

கமலி - தவெக

ஜெகதீஸ்வரி - தவெக

பர்வேஸ் - தவெக

விஜய் பாலாஜி - தவெக

சம்பத் குமார் -தவெக

சரத்குமார் - தவெக

குமார் - தவெக

தென்னரசு - தவெக

விஜய் தமிழன் பார்த்திபன் - தவெக

ரமேஷ் - தவெக

விக்னேஷ் - தவெக

ராஜேஷ் குமார் - காங்கிரஸ்

விஸ்வநாதன் - காங்கிரஸ்

ராஜ்குமார் - தவெக

ராஜீவ் - தவெக

காந்திராஜ் - தவெக

லேகேஷ் தமிழ்ச்செல்வன் - தவெக

கும்பகோணம் வினோத் - தவெக

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!! இனி வாட்ஸ்அப்பிலும் ரீசார்ஜ் செய்யலாம்.!
TN Cabinet

தவெக அமைச்சர்கள் 19 பேர் மற்றும் காங்கிரஸில் 2 அமைச்சர்கள் என மொத்தம் 21 பேர் பதவி ஏற்றனர். கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்று பெறுவது பெருமைக்குரிய தருணம் ஆகும் என அக்கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய இனி 55 நிமிடங்கள் போதும்.!
TN Cabinet
logo
Kalki Online
kalkionline.com