புதிய வீடு கட்ட, புதுப்பிக்க ரூ.10 லட்சம் கடன்: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

உங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் தமிழ்நாடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (DCCB) வீட்டு வசதி கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்று பார்க்கலாம் வாங்க...
Home loan
Home loan
Updated on

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவுவாகும். வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தாகவும் இருப்பதால் செல்வங்களில் வீடு முதன்மையாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி வீடுகள், இன்றைய சூழலில் ஒருவரது தனித்தன்மை மற்றும் சமூக அந்தஸ்தை நிரூபிக்கும் சொத்தாக பார்க்கப்படுகிறது. ஒருவரது வீடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, அவரை எடை போடுவது சமூக வழக்கமாக உள்ளது. காரணம், வீடு என்பது குடும்பம், பாதுகாப்பு, நம்பிக்கை, வருமானம் மற்றும் சந்தோஷம் ஆகியவற்றின் கூட்டு கலவையாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது நிலைக்கேற்ப சொந்த வீட்டு கனவு இருந்து கொண்டுள்ளது. கூலி வேலை செய்பவர், சொந்தமாக ஓட்டு வீடு கட்ட விரும்புவார். பெரிய தொழில் அதிபராக இருப்பவர் சொந்தமாக ஒரு தனித்தீவை வாங்கி அதில் விடுமுறைக்கான ‘ரெஸ்ட் ஹவுஸ்’ அமைப்பதற்கு விரும்புகிறார்.

ஆசையின் அளவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடுமே தவிர, அனைவரின் ஆழ்மன விருப்பமும் சொந்தமாக ஒரு சிறிய வீடாவது இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இருப்பதை காண முடியும்.

உழைத்த பணம் கைக்கும், வாய்க்கும் சரியாக இருக்கும்பட்சத்தில் சொந்த வீடு என்பது கனவாகவே இருந்து விடுமோ..? என்ற சந்தேகம் குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் பரவலாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பொதுமக்களின் வீடு வாங்கும் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (District Central Cooperative Banks - DCCB) மூலமாக இந்த வீட்டு வசதி கடன்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் புதிதாக ஒரு நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டிருந்தாலும், அல்லது ஏற்கனவே இருக்கும் வீட்டை விரிவாக்கம் செய்ய நினைத்தாலும், அல்லது பழுதடைந்த வீட்டை பட்டிபார்க்க நினைத்தாலும் எளிய தவணை முறையில் இத்திட்டம் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் யார் யாரெல்லாம் பயன் பெறலாம், என்னென்ன தகுதிகள் தேவை, எவ்வளவு கடன் கிடைக்கும் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விரிவான தகவல்களை காண்போம்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

* கட்டிட மதிப்பீடு அல்லது சொத்தின் மதிப்பில் சுமார் 80% வரை கடன் பெறலாம்.

* 15 முதல் 20 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் வழங்கப்படுகிறது.

* கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை விட வட்டி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் (தோராயமாக 9.75% முதல் 10.00% வரை).

* புதிய வீடு கட்டுதல், வாங்குதல் மற்றும் வீட்டைப் புதுப்பித்தல் போன்ற தேவைகளுக்குப் பெறலாம்.

* இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். ஆண்டிற்கு 12% வட்டி விதிக்கப்படுகிறது. (வங்கி விதிமுறைகளின்படி இந்த வட்டி விகிதம் அவ்வப்போது மாற்றத்திற்கு உள்ளாகலாம்).

வீட்டு வசதி கடன் திட்டத்திற்கான விதிமுறை:

இந்த வீட்டு வசதி கடன் திட்டம் முக்கியமாக மூன்று தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம்:

* நீங்கள் வசித்து வரும் வீடு பழையதாகிவிட்டாலோ, அல்லது அதன் கூரை, சுவர்கள் போன்ற கட்டமைப்புகளில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டு பழுதுபார்க்க (Repair)வேண்டியிருந்தாலோ, வீட்டைப் பாதுகாப்பாகவும் வசிப்பதற்கு ஏற்றவாறும் மாற்றியமைக்க இந்த கடனைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
லட்சங்களில் செலவு... நிம்மதியான வாழ்வு: வீட்டுக் கடன் மற்றும் கார் கடனைக் குறைப்பது எப்படி?
Home loan

* சொந்தமாக நிலம் வைத்திருந்து, அதில் புதிய வீடு கட்ட விரும்புபவர்கள் (New House Construction)கட்டுமானப் பணிகளுக்காக இக்கடனைப் பெறலாம்.

* குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, ஏற்கனவே உள்ள வீட்டில் கூடுதல் அறை, புதிய தளம் (Floor) அல்லது ஒரு பகுதியை விரிவாக்கம் (Extension)செய்ய திட்டமிட்டால், அதற்காக இக்கடனைப் பெறலாம்.

Loan Status
House loan

தேவைப்படும் ஆவணங்கள்:

வங்கியில் கடன் பெற அணுகும்போது பின்வரும் ஆவணங்களின் அசல் (Original) மற்றும் சுய சான்றொப்பம் (Self-attested) செய்யப்பட்ட நகல்களைக் கொண்டு செல்ல வேண்டும்:

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

ஆதார் அட்டை, பான் (PAN) அட்டை அல்லது அதற்கு இணையான அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணம்

முகவரிச் சான்று

நிலத்தின் அசல் பத்திரம் மற்றும் வில்லங்கச் சான்று

அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரின் மதிப்பீட்டுச் சான்று

உள்ளாட்சி அமைப்பின் கட்டிட அனுமதி மற்றும் வரைபடம்

வருமானச் சான்று அல்லது வருமான வரி கணக்குத் தாக்கல் (ITR) நகல்கள்

வங்கி தரப்பில் கேட்கப்படும் இதர கூடுதல் ஆவணங்கள்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே (Resident of Tamil Nadu) விண்ணப்பிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
வீடு கட்ட கடன் வாங்குவது எப்படி?
Home loan

இந்த திட்டத்தில் கீழ் பெறப்படும் கடன் தொகை கண்டிப்பாக வீடு கட்டுதல், பழுதுபார்த்தல் அல்லது விரிவுபடுத்துதல் போன்ற வீட்டு வசதி சார்ந்த தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது முககியமான விதிமுறையாகும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வயது வரம்போ அல்லது சாதி, சமூக அடிப்படையிலான எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் தகுதியுள்ள அனைத்து தமிழக மக்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என்பதால் விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (DCCB) அல்லது அதன் கிளைக்கு நேரடியாகச் சென்று மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட கூட்டுறவு (DCCB) வங்கிக் கிளையிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் வங்கிக் கிளையில் உள்ள உரிய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அதற்கான ஒப்புகைச் சீட்டை (Acknowledgement Receipt) பெற்றுக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
சொந்த வீடு கனவா? வீட்டு கடன் வாங்கும் முன் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்..!
Home loan

வணிக வங்கிகளை அணுகுவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு இந்த (DCCB) வீட்டு வசதி கடன் திட்டம் ஒரு சிறந்த நிதி ஆதாரமாக இருக்கும். மிகக் குறைந்த ஆவணங்களுடன், எளிய முறையில் 10 லட்சம் வரை கடன் பெற்று தங்களது சொந்த இல்லக் கனவை நனவாக்க தமிழக அரசு வழங்கும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com