வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலையே வேண்டாம்... இந்த 12 ஆவணங்கள் இருந்தாலே நீங்களும் ஓட்டு போடலாம்!

Voter id
Voter id
Published on

"காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம். பிரசாரங்களுக்கான அனுமதி ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும். 5,000 நபர்களுக்கு மேல் பங்கேற்கும் பிரசார கூட்டங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்."

என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் அவ்வப்போது வெளியாகும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களின் கவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் மேலே கூறிய பிரசாரங்களுக்கான ஆன்லைன் அனுமதியும் கூட்டத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்துப் பெறும் அனுமதியும் மிக முக்கியமானதாக உள்ளது.

இதே போன்ற இன்னொரு முக்கியமான அறிவிப்பாக வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதற்கு முன்னர் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். அதை அளிக்க இயலாத வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும்.

அதன்படி,

  1. ஆதார் அட்டை,

  2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி அடையாள அட்டை.

  3. புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்.

  4. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை.

  5. ஓட்டுநர் உரிமம்.

  6. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை.

  7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை.

  8. இந்திய கடவுச்சீட்டு.

  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

  10. மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.

  11. பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை.

  12. இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை.

ஆகியவற்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்" என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மத்திய அரசின் திடீர் அறிவிப்பு: பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது..!
Voter id

2021ல் நடைபெற்ற தேர்தலிலும் இதே போன்ற விதிகள் இருந்தது. பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வாக்காளர் அட்டை பெற முடியாதவர்கள் பூத் ஸ்லிப்களை (Booth slip) கொண்டு சென்றார்கள். ஆதார் உள்ளிட்ட 11 விதமான அடையாள சான்றுகளை ID காட்டினர். பூத்க்களில் பெயரை உறுதிசெய்து olling booth-ல் பெயர் verify செய்து வாக்களித்தார்கள்.

தேர்தல் ஆணையம் (Election Commission) விதிகள் பெரும்பாலும் முந்தைய தேர்தல் போலவே உள்ளதுடன் மக்கள் எவ்வித சந்தேகமும் இன்றி வாக்களிக்கலாம்.

இத்துடன் மேலும் எந்த விபரம் வேண்டும் என்றாலும் இணையதளம் மூலம் அறியும் வசதியும் உள்ளது சிறப்பு.

தமிழ்நாடு தேர்தல் தகவல்களுக்கான வெப்சைட்

Website: https://www.elections.tn.gov.in

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com