பூத் ஸ்லிப் இல்லையா? கவலையை விடுங்கள்..பத்தே நிமிடத்தில் டவுன்லோட் செய்யலாம்..!!

booth slip
booth slip
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கிறது. வாக்காளர் அனைருக்கும் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் பெயர் எண் ஓட்டுச்சாவடி குறித்த விபரங்கள் அடங்கிய தாள் அநேகமாக வந்திருக்கும்.

பூத் ஸ்லிப்களை வீடு வீடாக சென்று வழங்கி வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் அல்லது வேறு காரணங்களால் பூத் ஸ்லிப் கிடைக்காதவர்கள் என்ன செய்வது என்று குழப்பம் வரும்.

அந்தக் கவலையே வேண்டாம். உங்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியை தரவிறக்கம் செய்து சில நிமிடங்களில் உங்கள் ஓட்டு ஸ்லிப்பை நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது இ சேவை மையத்துக்கு சென்று அவர்களிடம் உதவி கோரலாம்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் சில நிமிடங்களில் உங்கள் ஓட்டு ஸ்லிப்பை நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூத் ஸ்லிப்பை டவுன்லோட் செய்வது எப்படி? பூத் ஸ்லிப் பெறும் வழிகள் :

01.முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் 'ECI App' (Voter Helpline App) என்ற செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

02. உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்த பின் அதற்கு வரும் ஓடிபி (OTP) மூலம் லாகின் (Login) செய்யவும்.

03. செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள வாக்காளர் சேவை ('Voter Service' ) என்ற பகுதிக்குச் செல்லவும். அதில் 'Search Your Name in Voter List' என்பதைத் தேர்வு செய்து அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC Number) அங்கு உள்ளீடு செய்யவும்.

04. உங்கள் பெயர் மற்றும் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download) பட்டனை அழுத்தி உங்கள் பூத் ஸ்லிப்பை (Booth Slip) சேமித்துக் கொள்ளலாம்.

பொதுவாக பூத் ஸ்லிப் நமது வாக்குச்சாவடி எண் மற்றும் வரிசை எண்ணை எளிதாகக் கண்டறிய உதவும் என்பதால் இது கையில் இருந்தால் வாக்குச்சாவடியில் நமது நேரம் மீதமாகும். ஆகவே உடனடியாக ஆப்பை டவுன்லோட் செய்து பூத் ஸ்லிப்பை பெறுங்கள்.

இதையும் படியுங்கள்:
குடிநீர் வசதி முதல் மெட்ரோ வரை…!! சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!
booth slip
logo
Kalki Online
kalkionline.com