வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்! – இந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தாலே போதும்..!

 Voter ID Card
Voter ID Card
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கிறது. வாக்காளர்களும் வேட்பாளர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் ஏப்ரல் 23 அன்று தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். வேட்பாளர்களுக்கான பிரச்சாரங்களை கட்சித்தலைவர்கள் முன்னெடுக்க வாக்காளர்களுக்கான வசதிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்த நிலையில் வாக்களிக்க தேவையாக தேவையான வாக்காளர் அடையாள அட்டை ஏதோ ஒரு காரணத்தால் தொலைந்து விட்டால் காணாமல் போய்விட்டாலோ கவலைப்பட வேண்டாம் அதற்கான மாற்று வழியாக12 மாற்று அடையாள அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை வைத்து தேர்தலில் வாக்களிக்கலாம் . அவை என்னென்ன என்று பார்ப்போம்.

முதலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுடைய பெயர் நீங்கள் வாக்களிக்கும் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். எனவே வாக்காளர் அட்டை உங்களிடம் இருக்கிறதோ இல்லையோ முதலில் நீங்கள் செய்ய வேண்டியது வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் voters.ece.gov.in அல்லது Voter Helpline App எனும் தளங்களில்

வாக்காளர்கள் தங்கள் புதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. எனவே அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ் அல்லது எண் இருந்தால் அதைத் தந்து டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

இல்லை அதற்கெல்லாம் நேரம் இல்லை என செல்பவர்கள் ஓட்டுப் போட வசதியாக 12 மாற்று ஆவணங்களை பயன்படுத்தலாம். வாக்குச்சாவடிக்கு செல்லும் போது அவசியம் இந்த 12 மாற்று அடையாளம் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் .அத்துடன் உங்கள் கையில் பூத் ஸ்லிப் இருந்தால் உங்களுக்கான ஓட்டு போடும் நேரம் விரயமாகாமல் எளிதில் ஓட்டளிக்க முடியும். என்னென்ன மாற்று அடையாள ஆவணங்கள் என்று பார்ப்போம்.

1.ஆதார் அட்டை

2.புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சலக கணக்க புத்தகங்கள்.

3 . மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அடையாள அட்டை

4. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டை அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை.

5. ஓட்டுநர் உரிமம்

6. பான் கார்டு

7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படி பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை

8. இந்திய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட் )

9 . புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10 . மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.

11 பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை.

12 . இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை.

இல்லை நான் எனது வோட்டர் ஐடி விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பவர் வோட்டர் ஐடி (EPIC) கார்டு கைக்கு வரவில்லை என்றாலும், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைனில் பார்க்கலாம்.

தேசிய வாக்காளர் சேவை தளமான voters.eci.gov.in அதில் சென்று பெயர் உள்ளிடட்டு வாக்காளர் எண் மூலம் தேடலாம்.

இதையும் படியுங்கள்:
NDA என்றால் பாஜக தான்! பாஜக மட்டும் தான், ஒரு நாள் அதிமுகவை பாஜக கைப்பற்றும் – அரவிந்த் கெஜ்ரிவால்..!
 Voter ID Card
logo
Kalki Online
kalkionline.com