இலவச ஆடுகள், கறவை மாடுகள் பெற வேண்டுமா? இனி இந்த ஆவணம் கட்டாயம்..! தமிழக அரசு அறிவிப்பு..!

இலவச ஆடுகள், கறவை மாடுகள் பெற வேண்டுமா? இனி இந்த ஆவணம் கட்டாயம்..! தமிழக அரசு அறிவிப்பு..!
5 free goats to women
5 free goats to womenAi image : chatgpt

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருந்தார்.அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 தகுதிவாய்ந்த நபர்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 109.75 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தும் எண் ஒதுக்கப்படாதவர்கள் மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் கிடைக்கும் வரை, பதிவு ரசீதுடன் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை காட்டிப் பயன் பெறலாம்.

பயோமெட்ரிக் அங்கீகாரத்தில் சிக்கல் ஏற்பட்டால், ஓடிபி, வேறு பயோமெட்ரிக் முறை அல்லது கியூஆர் கோடு மூலம் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் ஒதுக்கப்படாததாலோ அல்லது அடையாளத்தை உடனடியாக நிரூபிக்க முடியாததாலோ தகுதியுள்ள யாருக்கும் திட்டப் பலன்கள் மறுக்கப்படக் கூடாது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்குப் பயன் கிடைப்பதை உறுதி செய்யத் தனிப் பதிவேடு பராமரிக்கப்பட்டு, துறை ரீதியான மறு ஆய்வும் மேற்கொள்ளப்படும். ஆகையால் தகுதியுடைய நபர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு தனது அரசிதழில் (Tamil Nadu Government Gazette) வெளியிட்டுள்ளது.

வெற்றி மகளிர் ஆடுகள் வழங்கும் திட்டம்: இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகச் சுமார் ₹109 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம்: இத்திட்டத்திற்காக ₹57 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை (G.O.Ms.No.149, நாள்: 17.11.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் உண்மையான பயனாளிகளுக்கு வெளிப்படைத்தன்மையுடனும், எவ்வித முறைகேடும் இன்றியும் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஆதார் சட்டம் 2016 (பிரிவு 7)-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பித்து அங்கீகாரம் (Authentication) பெறுவது அவசியமாகும். ஒருவேளை பயனாளியிடம் ஆதார் எண் இல்லாத பட்சத்தில், விண்ணப்பிப்பதற்கு முன்பாக ஆதார் எண்ணிற்காகப் பதிவு (Enrolment) செய்திருக்க வேண்டும்.

  • பதிவு ஒப்புகைச் சீட்டு (EID): ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்த பிறகும், ஆதார் எண் ஒதுக்கப்படாமல் இருந்தால், ஆதார் பதிவு மையத்தில் வழங்கப்பட்ட பதிவு அடையாள எண் (Enrolment ID - EID) கொண்ட ஒப்புகைச் சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • சிறப்பு முகாம்கள்: ஆதார் பதிவு செய்யாத பயனாளிகளுக்காகக் கால்நடை பராமரிப்புத் துறையே உரிய இடங்களில் ஆதார் பதிவு மையங்களை அமைத்தோ அல்லது பதிவாளர்களுடன் ஒருங்கிணைந்தோ அவர்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணிற்கு விண்ணப்பித்து, அது கைக்குக் கிடைக்கும் வரை தகுதியான பெண்களுக்குத் திட்டப் பலன்கள் மறுக்கப்படக் கூடாது என்பதற்காக, மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் ஆதார் பதிவு ஒப்புகைச் சீட்டுடன் (EID), கீழ்க்காணும் புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்:

  • வாக்காளர் அடையாள அட்டை (EPIC)

  • குடும்ப அட்டை (Ration Card)

  • சாதிச் சான்றிதழ் அல்லது இருப்பிடச் சான்றிதழ்

  • மருத்துவ அல்லது காப்பீட்டு அடையாள அட்டை

  • இந்திய பாஸ்போர்ட் (Passport) அல்லது ஓட்டுநர் உரிமம் (Driving Licence)

  • 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை

  • (UDID Card) அல்லது மருத்துவச் சான்றிதழ்.

இதையும் படியுங்கள்:
இந்த 1 கார்டு போதும்..! விவசாய கடன், மானியம், பயிர்க் காப்பீடு... அனைத்துக்கும் ஒரே தீர்வு..!
5 free goats to women