விவசாயிகளே மகிழ்ச்சியான செய்தி..! வனவிலங்கு சேத நிவாரண தொகை பல மடங்கு உயர்வு..!

வனவிலங்கு தாக்குதல் இழப்பீடு ₹5 லட்சமாக உயர்வு! பயிர் சேதத்திற்கு ₹40,000! அரசாணை வெளியீடு!
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

வனவிலங்குகளால் காயம் (அ) பகுதி உடல் ஊனம் ஏற்பட்டால் சுமார் ₹60,000 வழங்கப்பட்ட நிலையில், இனி ₹5 லட்சம் வழங்கப்படும். சிறிய காயங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத சூழலில், தற்போது ₹20,000 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்கள் சேதமடைந்தால் ஏக்கருக்கு ₹40,000 வரை கிடைக்கும்.வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டு தொகையை பெருமளவில் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில்,

“வனவிலங்குகள் தாக்கி மனிதர்களுக்கு கடுமையான காயம் அல்லது உடலில் ஒரு பகுதி செயலிழப்பு ஏற்பட்டால், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். இதற்கு, 20 முதல் 50 சதவீதம் வரை உடல் செயலிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

இதற்கான பாதிப்பு தொடர்பாக, மாவட்ட மருத்துவ அலுவலர் அல்லது மருத்துவக் குழு சான்றளிக்க வேண்டும். இதுவரை இத்தகைய பாதிப்புகளுக்கு, 59 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, வனவிலங்குகளால் சிறிய காயங்கள் ஏற்பட்டால், அதற்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், இனி அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதமடைந்தால், இதுவரை ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் அல்லது உண்மையான சேத மதிப்பீட்டு தொகை, இதில் எது குறைவாக உள்ளதோ அது வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயாக இந்த இழப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சேதமடைந்த நிலத்தின் அளவு மற்றும் உண்மையான சேத மதிப்பீட்டின் அடிப்படையில், இவற்றில் குறைவான தொகையே இழப்பீடாக வழங்கப்படும். மேலும், தென்னை மரங்கள் சேதமடைந்தால், மரத்தின் வயத்திற்கு ஏற்ப இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு வரையிலான தென்னங்கன்றுகளுக்கு 500 ரூபாயும், ஒன்று முதல் நான்கு வயதுடைய மரங்களுக்கு ஆயிரம் ரூபாயும், நான்கு வயதிற்கு மேற்பட்ட காய்க்கும் மரங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

வீடுகளுக்கான இழப்பீடு ரூ.1.50 லட்சமாக உயர்வு

இதற்கு முன்பு ஒரு மரத்திற்கு 500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வனவிலங்குகளால் சேதமடையும் ஒவ்வொரு வாழைச் செடிக்கும், இனி 250 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகளால் வீடுகள் சேதமடைந்தாலும் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

முழுமையாக அல்லது கடுமையாகச் சேதமடையும் கான்கிரீட் வீடுகளுக்கு இதுவரை 95 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும், உண்மையான சேத மதிப்பீட்டு தொகை இதைவிட குறைவாக இருந்தால், அந்தத் தொகையே கொடுக்கப்படும்.

Tamilnadu government
Tamilnadu government

தொடர்ந்து, முழுமையாகச் சேதமடைந்த ஓலை மற்றும் மண் வீடுகளுக்கு இதுவரை 10 ஆயிரம் ரூபாயும், கடுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. இனி இத்தகைய வீடுகளுக்கு அதிகபட்சமாக 15 ரூபாய் வழங்கப்படும். வீட்டின் கட்டுமானப் பொருட்களின் அடிப்படையில் மதிப்பிடப்படும் உண்மையான சேதத் தொகையே இறுதி இழப்பீடாக நிர்ணயிக்கப்படும்.

பால் தரும் கால்நடைகளுக்கான இழப்பீடு தொகை உயர்வு

பகுதியளவு சேதமடைந்த கான்கிரீட், மண் உள்ளிட்ட அனைத்து வகை வீடுகளுக்கும் இதுவரை 5 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும். மேலும், வனவிலங்குகளால் உயிரிழக்கும் பால் தரும் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, தற்போது 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் இடையிலான மோதல்களில் மனித உயிரிழப்பு அல்லது நிரந்தர உடல் செயலிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ரூபாய் 5 லட்சத்தில் இருந்து, ரூபாய் 10 லட்சமாக கடந்த 2024ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. மேலும், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், தற்போது இந்த இழப்பீட்டுத் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் காப்புக்காடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் மோதல்களால் பாதிக்கப்படுவோருக்கு இந்த உயர்த்தப்பட்ட இழப்பீடு தொகை வழங்கப்படும். எனினும், வனச்சட்டங்கள் மற்றும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டங்களின் விதிகளை மீறிச் செயல்படுபவர்களுக்கு இந்த இழப்பீடு தொகை பொருந்தாது” என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ரூ.75,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!
தலைமைச் செயலகம்