#BREAKING: ரூ.75,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!

crop loan relief, CM Vijay
crop loan relief, CM Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

நாடு முழுவதும் நாளை (நவம்பர் 8) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் வேளையில் விவசாயிகளுக்கு தீபாவளி பரிசாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை, கடன் அளவுக்கு ஏற்ப தள்ளுபடி செய்திருந்தது தமிழக அரசு. ஆனால் முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளும் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி ரூபாய் 75 ஆயிரம் வரை பயிர்க் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதையும் படியுங்கள்:
கூட்டுறவு வங்கிகளில் வாராந்திர கடன் முகாம்: எந்த நாளில் என்ன கடன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
crop loan relief, CM Vijay

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இன்றி ரூபாய் 75 ஆயிரம் வரை பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தள்ளுபடிக்கு தகுதியான பயிர்க் கடன்களுக்கான கால வரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூபாய் 9,062.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பயிர்க் கடன் தள்ளுபடியின் மூலம் தமிழ்நாட்டில் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெறுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
செம ஷாக்..!! ஒரே நாளில் ரூ.45,000 உயர்வு.! தங்கத்தை விடுங்க... வெள்ளியின் ருத்ரதாண்டவம் ஸ்டார்ட்..!
crop loan relief, CM Vijay