தமிழ்நாடு அரசு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக தொடங்கி உள்ளது. மழை எவ்வளவு பெய்தாலும், மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி முன்னெச்சரிக்கை பணிகள் விவரம் வருமாறு:-
* மழை நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கு வசதியாக மழை நீர் வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி வைக்க வேண்டும்.
* நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக், மணல் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.
* சாலைகளில் தோண்டப்பட்ட அனைத்து பள்ளங்களும் மூடப்பட வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும்.
*மழைக்கு சாயும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அதனை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்
* மழைக்கு விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்களை முன்பே கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் மூலம் அகற்ற வேண்டும்.
குடிநீர் வினியோகம்:
* மழைக்காலத்தில் குடிநீர் வினியோகம் தடைபடக் கூடாது. சீரான வினியோகம் இருக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
* நீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முடிக்க வேண்டும். அதே வேளையில் இந்த பகுதிகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
* கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்கு அத னால் வரும் நோய்களை முற்றிலும் தடுக்க வேண்டும்
* நகர்ப்புற சுகாதார நிலை யங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
*மின்சாரத்துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட துறைகளு டன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, ரூ.42 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 5மாவட்டங்களில் உள்ள 202 இடங்களில் தீவிர தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 15 மண்டலத்திற்கு ஏழு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர், மணலி ஆகிய மண்டலங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.
மாதவரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.
ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு கைத்தறி, துணிநூல் மற்றும் காகிதத் துறை அமைச்சர் விஜய் பாலாஜி,
கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு டாக்டர்.பிரபு.
ஆலந்தூர், அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு விஜய் தமிழன் பார்த்திபன்.
பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக சென்னையில் மண்டல அளவிலான ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விபரம்;
மண்டலம் - அதிகாரி
திருவொற்றியூர் - பாலசுப்பிரமணியம்
மணலி - குமரவேல் பாண்டியன்
மாதாவரம் - அருண் ராஜ்
தண்டையார்பேட்டை - கண்ணன்
ராயபுரம் - ஆஷா அஜித்
திருவிக நகர் - கணேசன்
அம்பத்தூர் - விவேகானந்தன்
அண்ணா நகர் - காயத்ரி கிருஷ்ணன்
தேனாம்பேட்டை - கிறிஸ்துராஜ்
கோடம்பாக்கம் - கோபால சுந்தரராஜ்
வளசரவாக்கம் - விஜய ராணி
ஆலந்துார் - வாகே சங்கேத் பல்வந்த்
அடையாறு - செந்தில் ராஜ்
பெருங்குடி - மகேஸ்வரி
சோழிங்கநல்லுார் - பாஸ்கர பாண்டியன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.