

விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்று 5 நாட்களில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.15,803 ஆயிரம் கோடி மதிப்புள்ள மெகா திட்டம் கைமாறி ஆந்திரா வசம் சென்று விட்டது.
திமுக அரசால் பெரும் சவாலுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட ரூ.15,803 ஆயிரம் கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட இருந்து மேம்படுத்தப்பட்ட நடுத்தர போர் விமான தயாரிப்பு திட்டம் ஆந்திராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்தியாவின் மிக முக்கிய பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றான, அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் (AMCA) ‘விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மய்யம்’ தமிழ்நாட்டிற்கு வராமல், அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருப்பது தமிழக மக்கள் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 5-ஆம் தலைமுறை அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் (AMCA) விமான சோதனை மற்றும் வடிவமைப்பு மையம், ஓசூரில் அமையவிருந்து கைநழுவி ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சுமார் ரூ.15,000 கோடி மதிப்பிலான இந்த மெகா பாதுகாப்புத் திட்டம், ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் அமையவுள்ளது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கழகத்தின் சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் நடுத்தர ராணுவ விமானம் தயாரிப்பு நிறுவனத்தை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.
DRDO மற்றும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) இணைந்து உருவாக்கும் அதிநவீன போர் விமானங்களை சோதனை செய்வதற்கான பிரத்யேக மையம் இதுவாகும். பெங்களூருக்கு மிக அருகில் இருப்பதால், ஓசூரில் இத்திட்டத்தை கொண்டு வர கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இத்திட்டம் தமிழகத்திற்கு வந்தால் தொழில் வளர்ச்சி பல மடங்கு பெருகும் என்பதால், 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கவும் தமிழக அரசு முன்வந்திருந்தது. ஆரம்பக்கட்ட பணிகள் நடந்துவந்த நிலையில் இந்த திட்டத்தை ஆந்திர மாநிலம் புட்டப்பர்த்தியில் அமைக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் முடிவு செய்து இரு தினங்களுக்கு முன்பு இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்துள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
தமிழ்நாடு, ஆந்திரா என இரண்டு மாநிலங்களுக்கும் இடையே இந்த திட்டத்தை பெறுவதில் பிராந்தியப் போட்டி இருந்த நிலையில், தமிழகத்தின் தீவிர முயற்சியையும் மீறி, மத்திய அரசு இந்தத் திட்டத்தை ஆந்திர மாநிலத்திற்கு வழங்கியது.
ஓசூரில் விமான ஓடுதளம் 3.5 கி.மீ நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆந்திராவில் உள்ள ஓடுதளம் வெறும் 2.1 கி.மீ தான். ஆந்திரா இனிமேல்தான் நிலத்தை கையகப்படுத்தி ஓடுதளத்தை 3 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும். இவ்வளவு சாதகங்கள் இருந்தும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவை தேர்ந்தெடுத்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை இன்னும் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு அரசியல் காரணங்களுக்காக ஆந்திராவிற்கு வழங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு இந்த திட்டத்திற்கான அனைத்து வசதிகளும் இருந்தபோதும் இந்த திட்டத்தை ஏன் ஆந்திராவிற்கு கொண்டு போனீங்க என்று முதலமைச்சர் விஜய் இதுகுறித்து கேள்வி கேட்காதது ஏன் என்பது குறித்து அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ள கீர்த்தனாவும் இதுகுறித்து பேசாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இடமாற்றம் தமிழகத்திற்குப் பெரும் இழப்பு என்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது அதிருப்தியைத் தெரிவித்தார். மேலும் இத்திட்டம் கைநழுவியது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் அவசர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.
பல ஆயிரம் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இந்த ரூ.15,000 கோடி மதிப்பிலான அதிநவீனப் பாதுகாப்புத் திட்டம் அண்டை மாநிலத்திற்குச் சென்றுள்ளது, ஜோசப் விஜய் அரசுக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே அனைத்து தரப்பினரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், முதலமைச்சர் என்ன பதிலளிக்க போகிறார் அல்லது எப்போதும் போல அமைதி காக்க போகிறாரா என்ற கேள்வி அரசியல் கட்சியினரிடையேயும், பொதுமக்களிடையேயும் எழுந்ததுள்ளது.