

தமிழகத்தின் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் இந்த பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் விற்பனை செய்து வந்தனர்.
ஆனால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவில்லை. இதனால் ஆவினுக்கு பால் வழங்குவதற்கு தயக்கம் காட்டும் விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆவின் நிறுவனம் சராசரியாக 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு கொள்முதல் செய்கிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலை ரூ.50 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பதற்கே விவசாயிகள் முன்னுரிமை அளிக்கின்றனர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3,16,000 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ஆனால் அரசு உயர்த்தி அளவு போதாது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆவின் நிறுவனத்துக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயா்த்த வேண்டும்.
பால் முகவா்களின் விற்பனை கமிஷனை லிட்டருக்கு ரூ.5 ஆக அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் தற்போது லிட்டருக்கு ரூ.41 ஆக உள்ள ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.44-ஆக (ரூ.10 உயர்வு) முழுமையாக உயர்த்தக் கோரி, ஆகஸ்ட் 24 முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. அரசு சமீபத்தில் அறிவித்த ரூ.3 உயர்வு போதாது என்பதே இவர்களின் போராட்டத்திற்கான முக்கியக் காரணமாகும்.
ஆவின் பால் கொள்முதல் விலையை, பசும்பால் ரூ.44 எனவும், எருமை பால் ரூ.60 எனவும் உயர்த்த வேண்டும், சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு ஆவின் பால் வழங்க வேண்டும்,
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உயா்த்தப்படாத பால் முகவா்களின் விற்பனை கமிஷனை தற்போது வழங்கப்படும் லிட்டருக்கு ரூ.2-இல் இருந்து ரூ.5 ஆக உயா்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவினுக்கான பால் கொள்முதல் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைச் சரிசெய்ய விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும், பால் உற்பத்தியாளா்களுக்கு மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்கும் திட்டத்தையும் உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் கால்நடை தீவனங்கள் விலை கணிசமாக உயர்வு, தீவனத்திற்கான மானியம் நிறுத்தம் போன்ற காரணங்களால், பால் உற்பத்தி செலவினங்கள் அதிகமாகியுள்ளது. இதனால், கூடுதல் விலைக்கு பாலை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தனியார் நிறுவனங்கள் ஆவினை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதல் விலைக்கு பாலை கொள்முதல் செய்கின்றன.
இதனால், தனியாருக்கு பாலை வழங்க விவசாயிகள் முன்வருவதால், ஆவினுக்கு வரும் பாலின் அளவு குறைந்து விட்டது.
குறிப்பாக, நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல், தற்போது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இது விரைவில் 25 லட்சமாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தின் வருவாய் இழப்பை ஈடுசெய்ய பிற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை ஆண்டுதோறும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப மறுஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் கிடைப்பதும் உறுதி செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
தனியார் நிறுவனங்கள், ஆவினை காட்டிலும் லிட்டர் ஒன்றுக்கு, 10 - 12 ரூபாய் வரை, பால் வழங்குபவர்களுக்கு கூடுதல் விலை வழங்குகின்றன. இதனால், தனியார் பால் கொள்முதல் விலை உயர்வால் ஈர்க்கப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக தனியாரை நாடிச் செல்கின்றனர்.
இத்தகைய செயல்பாடுகளால் தான், ஆவின் பால் கொள்முதல் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. எனவே, ஆவின் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசுக்கு வருகின்ற 23ம் தேதி வரை கெடு விதிக்கின்றோம்.
அதற்குள் நல்ல முடிவை அறிவிக்கவில்லை என்றால், வரும் 24ம் தேதி முதல் பால் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.