தமிழ்நாட்டில் 1429 Health Inspector காலியிடங்கள் அறிவிப்பு..! 71,900 வரை சம்பளம்..!

Job vacancy
Job vacancy
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு-II (Health Inspector Grade-II) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 1429

பணியிடம் : தமிழ்நாடு

ஆரம்ப நாள் : 27.10.2025

கடைசி நாள் : 16.11.2025

பதவி: Health Inspector Grade-II

சம்பளம்: இந்த சுகாதார ஆய்வாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ₹19,500 முதல் ₹71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்கள்: 1429

கல்வி தகுதி:

1. 12-ஆம் வகுப்பு (HSC) தேர்வை உயிரியல் (Biology) அல்லது தாவரவியல் (Botany) மற்றும் விலங்கியல் (Zoology) பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

3. மேலும், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW) (ஆண்) / சுகாதார ஆய்வாளர் (HI) / சுகாதாரத் துறை ஆய்வாளர் (SI) பாடப் பிரிவின் சான்றிதழையும் பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு:18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

  • SC / SCA / ST / DAP – Rs.300/-

  • Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Tamil Language Eligibility Test (SSLC Standard)

  • Computer Based Test (CBT) for Health Inspector Grade-II (Objective Type)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்கள் கவனத்திற்கு..! இனி ஆயுர்வேதத்தை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க முடிவு..!
Job vacancy
logo
Kalki Online
kalkionline.com