ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு! நாளை ரேஷன் கடைகள் இயங்குமா?தமிழக அரசு திடீர் அறிவிப்பு.!

தீபாவளி பண்டிகை காலத்தில் ரேஷன் கடைகள் இயங்கும் நாட்கள் மற்றும் மாற்று வேலைநாள் பற்றிய விரிவான விளக்கம்.
ரேஷன் கடைகள்
Ration ShopsAI image
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டில் மொத்தம் 35,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 6-ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுவாக மாதத்தின் முதல் மற்றும் 2வது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாகும். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நாளை (நவம்பர் 6) ரேஷன் கடைகள் இயங்கவுள்ளன.

இந்த அறிவிப்பு பண்டிககை நேரத்தில் கடைசி நேர கூட்ட நெரிசலையும், நீண்ட வரிசையையும் தவிர்க்க சொந்த ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பே, மாதாந்திர ரேஷன் பொருட்களைப பொதுமக்கள் வாங்கிச் செல்ல வழிவகை செய்கிறது.

தமிழ்நாடு அரசின் அறிவிப்புபடி தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9-ம் தேதி (திங்கட்கிழமை) ரேஷன் கடைகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 21-ம் தேதி (சனிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கவுள்ளன.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு ஏதுவாக இம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான (06.11.2026) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ration Shops
Ration Shops
இதையும் படியுங்கள்:
திருவண்ணாமலை மகா தீபம் 2026: பக்தர்களுக்கு அதிரடி தடை! முழு விவரம்.!!
ரேஷன் கடைகள்

மாத ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (நவம்பர் 5) முதல் 7-ம் தேதி வரை தீபாவளி பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கப்படி நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாகும். ஆனால் தீபாவளிக்குள் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகளை முடிக்க வேண்டியும், பொதுமக்களுக்கு நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வழங்கிடவும் நாளை (நவம்பர் 6) ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கவுள்ளன. நாளை மற்றும் நாளை மறுநாளும் (நவம்பர் 7) ரேஷன் கடைகள் இயங்கும் என்பதால், தீபாவளி பண்டிகை நேரத்தில் இது பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.

நாளை வழக்கம் போல் ரேஷன் கடைகள் இயங்கும் என்பதால், பொதுமக்கள் நாளையும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இதன்மூலம் சொந்த ஊருக்குச் செல்வோர் முன்கூட்டியே ரேஷன் பொருட்களை வாங்கி வைத்து விட்டு, பயணத்தை திட்டமிட ஏதுவாக இருக்கும்.

ரேஷன் கடை வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த குழப்பங்களைத் தீர்த்து, நவம்பர் மாதத்திற்கு உரிய ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தமிழக அரசு நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் தவறவிடாமல் பெற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
அடிமேல் அடி! 4 நாட்களில் ரூ.5,240 உயர்வு.! தங்கம் விலையின் திக் திக் ஆட்டம்!
ரேஷன் கடைகள்