அடிமேல் அடி! 4 நாட்களில் ரூ.5,240 உயர்வு.! தங்கம் விலையின் திக் திக் ஆட்டம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price Today
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 5) 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080-க்கு விற்பனையாகிறது. 4 நாட்களில் மட்டும் ரூ.5,240 உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.210-க்கு விற்பனையாகிறது.

நேற்று (நவம்பர் 5) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், மதியம் மீண்டும் ரூ.2,200 உயர்ந்துள்ளது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2,400 வரை உயர்ந்தது. அதோடு நேற்று காலையில் மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை, இப்போது கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

தீபாவளிக்கு தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் உயர்வை சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்ந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தல் முடிவால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் விலை உயர்ந்து விடுமோ என்ற பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 4) 1 கிராம் தங்கம் ரூ.300 அதிகரித்து ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.2,400 அதிகரித்து ரூ.1,04,800-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.210-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 5) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.285 உயர்ந்து ரூ.13,385-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,280 உயர்ந்து, ரூ.1,07,080-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.210-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,10,000-க்கும் விற்பனையாகிறது.

Gold Price today
Gold Price
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! ஆவின் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.!
தங்கம் விலை

நேற்று (நவம்பர் 3) முன்தினம் அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற்றது. நேற்று (நவம்பர் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இரு அவைகளிலும் ஜனநாயக கட்சியே வெற்றி பெற்றது.

அதிபர் டிரம்ப் பங்கு வகிக்கும் குடியரசு கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், இந்தத் தேர்தல் முடிவு உலக சந்தையையும் ஆட்டிப் படைத்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது. தற்போது அமெரிக்காவில் ஏதேனும் புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால் கூட அதிபர் டிரம்புக்கு அது மிகக் கடினமானதாக இருக்கும். இந்நிலையில் தங்கத்தின் மதிப்பு மேலும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் தான் தங்கம் விலை குறைந்து விட்டதே, இனி மேலும் குறையும் என்று ஆசையாக காத்திருந்தோம். ஆனால் இந்த வாரம் அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மேலும் தொடராமல் இருந்தால் மட்டுமே சாமானிய மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து? முழு விவரம் இதோ.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.